ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோல குபு பாரு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு மருத்துவ நிபுணர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்

உலு சிலாங்கூர், மே 1- சேவைத் திறனை அதிகரிப்பது மற்றும் மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு தரம் உயர்த்தும் பணிகள் கோல குபு பாரு மருத்துவமனையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கூறினார்.

மருத்துவ நிபுணர்கள் இல்லாத காரணத்தால் விபத்துகளில் சிக்கியவர்கள் மற்றும் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் செலாயாங் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை குறித்து பொதுமக்கள் வெளியிட்ட மனக்குமுறல்களை தாங்கள் கவனத்தில் கொண்டுள்ளதாக டத்தோஸ்ரீ டாக்டர்  ஜூல்கிப்ளி அகமது கூறினார்.

இந்த தரம் உயர்த்தும் பணியின் ஒருபகுதியாக மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு மேம்படுத்தப்பட்டு அடுத்த மாதம் தொடங்கி மருத்துவ நிபுணர் ஒருவர் அப்பிரிவில் பணியமர்த்தப் படுவார் என்று அவர் சொன்னார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் இங்கு பொது சிகிச்சை மருத்துவ நிபுணர் ஒருவர் பணியில் அமர்த்தப் பட்டுள்ளார். இம்மருத்துவமனையின் மருந்தகம் மற்றும் கார் நிறுத்துமிடங்களையும் நாங்கள் தரம் உயர்த்த விருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி கோல குபு பாரு மருத்துவமனைக்கு வருகை புரிந்த டாக்டர் ஜூல்கிப்ளி, மருத்துவமனையின் நிலைமையை நேரில் பார்வையிட்டதோடு பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுடன் அளவளாவினார்.

இந்த தரம் உயர்த்தும் பணிகள் கோல குபு பாரு மருத்துவமனையை மட்டுமின்றி மாநிலத்திலுள்ள இதர மருத்துவமனைகளையும் உள்ளடக்கியிருக்கும் என்பதோடு இப்பணி தொடர்ச்சியாகவும் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :