ECONOMYMEDIA STATEMENT

தொழிலாளர் வீட்டுப் பிரச்சனையை தீர்த்து-  தொழிலாளர்களின்  தோழன்   ஹராப்பான்   என்பதை நிரூபித்து விட்டது.

செய்தி சு. சுப்பையா

பாத்தாங் காலி.மே.7-  சிலாங்கூரில் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத பல பிரச்சனைகளைத் தீர்த்த பெருமை பக்காத்தான் ஹராப்பானுக்கு உண்டு. அந்த வரிசையில் பல ஆண்டுகள் தோட்டங்களில்  வீட்டுப் பிரச்சனையை எதிர் நோக்கியவர்களின்  விவகாரத்திற்கு  தீர்வு கண்டதன் வழி பக்காத்தான் ஹராப்பான்  என்றும்  இந்தியர்களின்  தோழன் என்பதை மீண்டும்  நிரூபித்து விட்டது.

26 ஆண்டுகளாக சொந்த வீடு வேண்டி 5 தோட்டத்து மக்களின்  கோரிக்கை வைத்து வந்தனர்.  இந்த  நியாயமான கோரிக்கையை  ஏற்று அதற்கான உடனடி தீர்வுக்கு  பிரதமரும்,  மாநில மந்திரி புசாரும்  தகுந்த  பங்களிப்பை வழங்க முன் வந்ததை வீடமைப்பு ஊராட்சி மன்ற அமைச்சர் ஙா கொர் மிங் நேற்று  அறிவித்தார்.

அடுத்த 2 ஆண்டுகளில் அதாவது 2026ல் அனைத்துத் தோட்டத் தொழிலாளர்களும் சொந்த வீடுகளைப் பெறும்  பொற்காலமாகும்  என்று தாம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் ஙா  கூறியுள்ளார்.

இந்த  வீட்டு விவகாரத்தால்  மனம் தளர்ந்து இருந்த உலு சிலாங்கூர் இந்திய வாக்காளர்கள்  உற்சாகமடைந்து  நம்பிக்கை கூட்டணி மீது தாங்கள் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை என்கிறார்கள் என  பெர்மாத்தாங் சட்டமன்ற  தொகுதியின் இந்தியச் சமுகத் தலைவர் ( KKI) பத்மநாதன் தெரிவித்தார்.

தொழிலாளர்களின்  26 ஆண்டு காலச் சொந்த வீட்டுக்கான  போராட்டத்தில் உள்ள நியாயத்தை அதிலுள்ள நீதியைப் பக்காத்தான்  ஹராப்பான்   உணர்ந்திருந்தாலும்  அதற்கான காலம் வரும் போது அதனை நிறைவேற்றத்  தயங்காது  என்பதை  கோல குபு பாரு வாக்காளர்களுக்கு மட்டும் அல்ல மலேசிய இந்தியர்களுக்கு உணர்த்தி விட்டது.

தொழிலாளர்களின் வயிற்றில் பால் வார்த்து விட்டது  பக்காத்தான் ஹராப்பான் கட்சி, ஆனால் இங்கு  வந்து பொய் பிரச்சாரத்தை நடத்திய கும்பல், இதற்கு பின்னும்  விஷயங்களைத் திசை திருப்பாமல், அவர்களின் பொய் மூட்டைகளை கட்டி கொண்டு  திரும்பியாக வேண்டும் எனக் குறிப்பிட்டார்  திரு பாலா.

பிரதமருக்கு எதிராகப் பொய் பிரச்சாரம் செய்து  வந்த  சுயநல வாதிகளின் மூஞ்சியில் கரி பூசி விட்டது  இந்த  அறிவிப்பு. தொழிலாளர்களின்  இந்த வெற்றியின் வழி  ரி.ம. 75 மில்லியன் செலவில் 245  தரை வீடுகள்  பெறுபவர்கள்,  கோலக் குபு பாரு பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளருக்கு வரும் 11ந் தேதி தகுந்த சன்மானம் வழங்கி தங்கள்  கடனை தீர்க்க   தீர்மானித்துள்ளனர்  மக்கள்  எனக்  கோலக் குபு பாரு சட்டமன்றத்தின் முன்னாள் (KKI) பாலாவும் தெரிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு பின்னர் இந்தியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இவர்கள் தற்போது நம்பிக்கை கூட்டணி வேட்பாளர்கள் முழு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்

இதே போல் தவறான பிரச்சாரங்களால்  கோபமாக இருந்த இந்தியர்கள் மனம்  மாறி வருவது தெரிகிறது. இந்த இடைத் தேர்தலில் மீண்டும் இந்தியச் சமுதாயத்தின் பேராதரவுடன்  நம்பிக்கை கூட்டணி  வெற்றி பெறும் என்று தாம் எதிர் பார்ப்பதாக  ஐ.பி.எப் கட்சியின் சிலாங்கூர் மாநிலத் தலைவர் இங்கர்சால் கூறினார்.


Pengarang :