BEIJING, 25 April — Perdana Menteri Tun Dr Mahathir Mohamad (empat, kanan) berkata sesuatu ketika mengadakan sidang telekomunikasi secara langsung dengan rakyat Malaysia pada lawatan di Huawei Beijing Research Centre hari ini. Turut hadir (dari, kanan) Pengasas Huawei, Ren Zeng Fei, Menteri Perumahan dan Kerajaan Tempatan (KPKT) Zuraida Kamaruddin dan Menteri Hal Ehwal Ekonomi Datuk Seri Mohamed Azmin Ali (dua, kiri). Dr Mahathir mengadakan lawatan kerja ke Beijing selama lima hari bermula hari ini dan menghadiri Forum Jalur dan Laluan bagi Kerjasama Antarabangsa Kedua.?– fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA????
NATIONAL

பெய்ஜிங் ஹூவாவே ஆய்வு மையத்திற்கு பிரதமர் துன் மகாதீர் வருகை

பெய்ஜிங், ஏப்.25-

சீனாவிற்கு வருகை புரிந்துள்ள பிரதமர் துன் டாக்டர் மகாதீர் ஹுவாவே நிறுவனத்தின் ஆய்வு மையத்திந் அதிநவீன தொழில்நுட்பத்தை நேரில் கண்டு வியந்தார்.
இந்த மையத்திற்கு வருகை மேற்கொண்ட பிரதமர் மகாதீரை ஹூவவே நிறுவன தோற்றுநர் ரென் ஜெங்ஃபெய் வரவேற்றார்.

தொலை தொடர்பு அலைவரிசை, தகவல் தொழில்நுட்பம், விவேக கைபேசி மற்றும் பொது தொடர்பு ஆகிய நான்கு துறைகளில் மிகச் சிறந்த தொழில்நுட்பத் திறனாற்றல் கொண்ட நிறுவனமாக ஹூவாவே விளங்குகிறது.

இந்த வருகையின் போது 5 ஜி தொழில்நுட்பம் மற்றும் புதிய வர்த்தக விரிவாக்கம் ஆகியவை குறித்து ஹூவாவே தோற்றுநர் ஜெங்ஃபெயும் தொழில்நுட்ப நிபுணர்களும் டாக்டர் மகாதீருக்கு விளக்கம் அளித்ததாக ஹூவாவே நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.


Pengarang :