KUALA LUMPUR, 20 Mac — Seorang suri rumah Nurrabia’tul Adawiyah Mohd Bistamim meluangkan masa bersama anak-anaknya ketika tinjauan suasana penguatkuasaan Perintah Kawalan Pergerakan di ibu kota hari ini. Hari ini merupakan hari ketiga penguatkuasaan Perintah Kawalan Pergerakan selama 14 hari bermula 18 untuk mencegah penularan baharu COVID-19 di negara ini. –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONALRENCANA PILIHAN

நடமாட்ட கட்டுப்பாடி ஆணை காலத்தில்’ பயனுள்ள நடவடிக்கைகளைத் திட்டமிடுவீர்!

கோலாலம்பூர், மார்ச் 26-

இன்னும் 5 தினங்களில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நடமாட்ட கட்டுப்பாடு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் இந்த கால கட்டத்தை பயனுள்ள வகையில் செலவிடுவதற்குத் திட்டமிட வேண்டும்.

கடந்த மார்ச் 18ஆம் தேதி நடப்புக்கு வந்த நடமாட்ட கட்டுப்பாடு இத்தரவானது கோவிட்-19 பரவலை தடுப்பதற்காக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கால நீட்டிப்பு குறித்து முன் கூட்டியே அறிவைப்பதன் மூலம் மக்கள் தங்களைத் தயார் படுத்திக் கொள்ள அவகாசம் வழங்கும் என்று பிரதமர் டான்ஸ்ரீ முகைதின் யாசின் தெரிவித்தார்.

முந்தைய தினங்களைப் போல் முதலாளிகள் தங்கள் பணியாளர்க:ஐ வீட்டில் இருந்த படியே பணியாற்றும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். இந்தச் சந்தர்ப்பத்தில் பொது மக்கள் தங்கள் குடும்ப உறவுகளுடன் அதிக நேரத்தை செலவிடப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனிடையே, இந்த கால கட்டத்தில் பல்வேறு உணவு வகைகளை சமைத்து பழகுவது,. காணொளியைப் பார்த்து உடற்பயிற்சி மேற்கொள்வது மற்றும் வீடியோ அழைப்பு வழி மற்றவர்களுடன் பேசுவது போன்றவற்றை சமூக வலைத் தளங்கள் பரிந்துரை செய்து வருகின்றன.


Pengarang :