ECONOMYMEDIA STATEMENTSELANGOR

நிலம், வீடமைப்பு தொடர்பான விவகாரங்களை கையாள சிறப்பு கண்காணிப்பு முறை

ஷா ஆலம், ஏப் 24- நிலம் மற்றும் வீடமைப்பு தொடர்பான விவகாரங்களைக் கையாள டாஷ்போர்ட் எனப்படும் கட்டுப்பாட்டு  பலகம்  முறையை  சிலாங்கூர் மாநில வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியத்தின் வாயிலாக மேம்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

வீடுகள், கடை வீடுகள், சிறு அலுவலகம் வீட்டு அலுவலகம் பற்றிய தரவுகளை பகிர்ந்து கொள்வதற்காக தேசிய சொத்து நில மையம், தேசிய வீடமைப்பு இலாகா, மலேசிய சொத்துடைமை மற்றும் வீடமைப்பாளர் சங்கம் ஆகிய தரப்புடன்  ஒத்துழைப்பு ஏற்படுத்தப்படும் என்று வீடமைப்பு மற்றும் நகர்ப்புற நல்வாழ்வுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

பிற மாநிலங்களிலிருந்து சிலாங்கூருக்கு குடி பெயர்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு எதிர்கால வீடமைப்புத் திட்டங்களை வரைவதற்கு இந்த நடவடிக்கை அவசியமாவதாக அவர் சொன்னார்.

இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற வீடமைப்பு மற்றும் நகர்ப்புற நல்வாழ்வு நிலைக்குழுவின் எதிர்கால இலக்கு மீதான கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சொத்துடைமைக்கான விண்ணப்பம், இணையம் வழி மருத்துவம் மற்றும் சம்பள முறை ஆகிய மூன்று திட்டங்களும் இலக்கவியல் திட்டத்தின் கீழ் கடந்தாண்டில் முழுமையாக அமல்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :