ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

முன்னாள்  டூசுன் டுரியான் தோட்டத தொழிலாளர் வீடுகளுக்கு மின்சார விநியோகம்- குணராஜ் பார்வையிட்டார்

பந்திங், அக் 5- இங்குள்ள டூசுன் டுரியான் தோட் முன்னாள் தொழிலாளர்களின்  வீடுகளுக்கு மீண்டும் மின்சார விநியோகத்தை ஏற்படுத்தும் பணிகளை மந்திரி புசார் அமிருடின் ஷாரியின் சிறப்பு அதிகாரி டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் பார்வையிட்டார். இந்த பயணத்தின் போது தொனாகா நேஷனல் பெர்ஹாட் (டி.என்.பி.) நிறுவனத்தின் அதிகாரிகளும் உடனிருந்தனர்.

அந்த குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளுக்கு, தோட்டத்தின் முன்னால் நிர்வாகமும், நில உரிமையாளரும், மின்சாரத்தை  துண்டித்துவிட்டதை அடுத்து, தொழிலாளர்கள் சுயமாக மின்சார கட்டணங்களை  செலுத்தும் வண்ணம், அவர்களுக்கு  தனி மீட்டர்களைப் பொருத்தும் பணி மேற்கொள்ளப்படும் சமயத்தில் தற்காலிக அடிப்படையில் அங்கு மின்சார விநியோகத்தை ஏற்படுத்தி தரும்படி தெனாகா நேஷனல் அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்கான அந்த வீடமைப்புத் திட்டத்திற்கு உயிரூட்டும் முயற்சியில் சிலாங்கூர் அரசு ஈடுபட்டு வருகிறது.

அந்த வீடமைப்புத் திட்டத்திற்கு குணராஜ் மேற்கொண்ட வருகையின் போது கோல லங்காட் தொகுதி பி.கே.ஆர். பொறுப்பாளர்களும் வருகை புரிந்தனர்.


Pengarang :