ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

இளையோருக்கு சினோவேக் தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சு ஒப்பதல்- மந்திரி புசார்

கிள்ளான், ஆக் 24– செல்வேக்ஸ் எனப்படும் சிலாங்கூர் அரசின் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் சினோவேக் தடுப்பூசிகளை இளையோருக்குச் செலுத்த சுகாதார அமைச்சு நிபந்தனையுடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளது.

எந்தவொரு கடுமையான நோயினாலும் பீடிக்கப்படாத 12 முதல் 17 வயது வரையிலான இளையோருக்கு இந்த வகை தடுப்பூசியைச் செலுத்தலாம் என மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் தடுப்பூசி பெறுவோரை மருத்துவர் சோதிக்கும் அதே வேளையில் பெற்றோர்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கும் உரிய விளக்கத்தையும் அளிப்பார் என்று அவர் சொன்னார்.

தடுப்பூசியைச் செலுத்துவதற்கு முன்னர் அதன் தொடர்பான சில  கேள்விகளை மருத்துவர் கேட்டு உரிய விளக்கத்தைப் பெறுவார் என்று அவர் மேலும் சொன்னார்.

இங்குள்ள பண்டமாரான் ஜெயா எம்.பி.கே. மண்டபத்தில் நடைபெறும் இளையோருக்கான தடுப்பூசித் திட்டத்தைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் இளையோருக்கு சினோவேக் தடுப்பூசி செலுத்தப்படும் வேளையில் பிக் எனப்படும் இளையோருக்கான தடுப்பூசித் திட்டத்தின் கீழ் பைசர் பயோஎன்டெக் தடுப்பூசி வழங்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.

பன்னிரண்டு வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு சினோவேக் தடுப்பூசியை வழங்குவதற்கு அனுமதிப்பது தொடர்பான முடிவு கடந்த அக்டோபர் முதல் தேதி நடைபெற்ற 364 வது மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.


Pengarang :