ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வெட்டு மர நிறுவனங்கள் சாலையை பராமரிப்பதை உறுதி செய்வீர்- அன்வார் வலியுறுத்து

கோலாலம்பூர், நவ 11– கோடிக்கணக்கான வெள்ளியை வருமானமாக ஈட்டும் வெட்டு மர நிறுவனங்கள் தங்களால் பழுதடைந்த சாலைகளை சீர் செய்வதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

சம்பந்தப்பட்டத் தரப்பினரை பொறுப்பை ஏற்பதிலிருந்து விடுவிக்கும் வகையில் மக்களவையில் பதிலை அளித்த புறநகர் மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் ஹஸ்பி ஹபிபுல்லாவை எதிர்க்கட்சித் தலைவரான அவர் கடுமையாகச் சாடினார்.

வெட்டு மரங்களை ஏற்றிய லோரிகள் பயன்படுத்தும் சாலைகள் மற்றும் வெட்டு மர நடவடிக்கைகள் குறித்து துணையமைச்சர் வழங்கிய பதிலைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். சாலைகளைப் பராமரிக்கும் பொறுப்பு கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் வெட்டுமர நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்யும் என்பதுதான் அவரது பதிலாக இருந்திருக்க வேண்டும்.

அதை விடுத்து வெட்டு மர நடவடிக்கைகள் முடிக்கு வந்து விட்டன என்ற ரீதியில் பதிலளிக்க கூடாது. இது பொறுப்பான பதில் அல்ல என்று மக்களைவில் கேள்வி நேரத்தின் போது அவர் கூறினார்.

முன்னதாக, புறநகர் பகுதிகளில்  சாலை நிர்மாணிப்பு மற்றும் பராமரிப்பு குறித்து பாராம் உறுப்பினர் அன்யி ங்காவ் எழுப்பிய மூலக் கேள்விக்கு ஹஸ்பி பதிலளித்தார்.

மாரிஸ் எனப்படும் மாநில சாலை பராமரிப்பு அறநிதி மூலம் சாலைகளைப் பராமரிக்கும் விவகாரத்தில் அமைச்சு தனது பொறுப்பிலிருந்து நழுவிடக் கூடாது என்றும் அன்வார் வலியுறுத்தினார்.

 


Pengarang :