ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

வறுமை ஒழிப்பு  திட்ட பயனாளிக்கான உதவி நிதி 10,000 வெள்ளியாக அதிகரிப்பு

பாங்கி, நவ 11- வறுமை ஒழிப்பு உதவி பெருந்திட்டத்தின் (புளுபிரிண்ட்) கீழ்  பயனாளிக்கு வழங்கப்படும் நிதியுதவி அடுத்தாண்டு முதல் 10,000 வெள்ளியாக அதிகரிக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கூடின பட்சம் 5,000 வெள்ளி இதுவரை வழங்கப்பட்ட நிலையில் சந்தையில் வர்த்தக உபகரணங்களின் விலை ஏற்றம் கண்டுள்ளதைக் கருத்தில் கொண்டு அந்த ஒதுக்கீடு அதிகரிக்கப்படுவதாக சமூக பொருளாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

இவ்விவகாரத்தை நான் கடந்த அக்டோபர் மாதம் ஆட்சிக்குழுவின் கவனத்திற்கு கொண்டுச் சென்றேன். ஆட்சிக்குழுவும் எனது பரிந்துரையை ஏற்றுக் கொண்டது என்று அவர் சொன்னார்.

இதனால் இத்திட்டத்தின் கீழ் உதவி பெறுவோரின் எண்ணிக்கை குறையக்கூடும். எனினும், வர்த்தக உபகரணங்களின் விலை ஏற்றம் கண்டு வருவதால் இம்முடிவை எடுத்தாகவேண்டியுள்ளது என்றார் அவர்.

இந்த புளுபிரிண்ட் திட்டத்தின் கீழ் பயன்பெறுவோர் மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவு மற்றும் பெங்குளு அலுவலகத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வழங்கப்பட்ட உபகரணங்கள் வருமானம் ஈட்டும் நோக்திற்காக முறையாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய அவ்வப்போது சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

வர்த்தகம் புரிவோருக்கு அவர்களின் தேவைக்கேற்ற உபகரணங்களை வழஙகுவதை இலக்காக கொண்ட இத்திட்டம் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.


Pengarang :