ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

#Selangor2022 வரவு செலவுத் திட்டம் நவம்பர் 26 ஆம் தேதி தாக்கல்

ஷா ஆலம்,  நவ 12-  சிலாங்கூர் அரசின் #Selangor2022 வரவு செலவுத் திட்டம் நவம்பர் 26 ஆம் தேதி சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. கோவிட்-19 தொற்றுநோய் தணிந்த பிறகு பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கையில் இந்த வரவு செலவுத் திட்டம் கவனம் செலுத்தும்.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ  அமிருடின் ஷாரி தாக்கல் செய்யும் இந்த வரவு செலவுத் திட்டம் டிவி சிலாங்கூர் ( selangortv.my ) மற்றும்  மீடியா சிலாங்கூர் முகநூல் ( www.facebook.com / MediaSelangor ) மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கும் இந்த வரவு செலவுத் திட்டம் தொடர்பான முக்கிய செய்தித் தொகுப்பு சிலாங்கூர் கினி ( selangorkini.my),மாண்டரின் ( selangorkini.my/zh-hans/ ) மற்றும் தமிழ் ( selangorkini.my/ta/ ) ஆகிய மூன்று இணைய பதிப்புகள் மூலம் தெரிந்து கொள்ளலாம் . ஆங்கிலப் பதிப்பை Selangorjournal.my என்ற இணைப்பின் மூலம் பெறலாம்.

அந்த வரவு செலவுத் திட்டத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விளக்கப் பட வடிவில் சமூக ஊடகங்களில் அன்றைய தினம் வெளியிடப்படும்.

சிலாங்கூர் கினி ஏட்டின் #Selangor2022 சிறப்பு பதிப்பு நவம்பர் 27 அன்று வெளியிடப்படும்.

Pengarang :