ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

ஒமிக்ரோன் வகை தொற்று டெல்டாவை விட விரைவாகப் பரவும் அபாயம்

கோலாலம்பூர், நவ 30- ஒமிக்ரோன் என பெயரிடப்பட்டுள்ள புதிய வகை கோவிட்-19 நோய்த் தொற்று டெல்டா வகை தொற்றை விட விரைவாகப் பரவும் தன்மை கொண்டதாக கருதப்படுகிறது.

எனினும், உருமாற்றம் கண்ட அந்த புதிய தொற்று எவ்வளவு கோரத்தன்மை கொண்டது என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

தற்போதைக்கு நாம் செய்யக்கூடியதெல்லாம் முகக்கவசம் அணிவது, கூடல் இடைவெளியைக் கடைபிடிப்பது, சுத்தத்தை பேணுவது, நல்ல காற்றோட்டத்தை உறுதி செய்வது, வாய்ப்பு வழங்கப்படும் பட்சத்தில் ஊக்கத் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வது  ஆகிய தடுப்பு நடவடிக்கைளை கடைபிடிப்பதுதான் என்று அவர் சொன்னார்.

புதிய வகை நோய்த் தொற்று பரவல் காரணமாக தென்னாப்பிரிக்கா, போஸ்ட்வானா, மொசாம்பிக், நம்பியா, ஜிம்பாப்வே உள்பட ஏழு நாடுகளுக்கு  மலேசியர்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக கடந்த வெள்ளியன்று கைரி கூறியிருந்தார்.

தென்னாப்பிரிக்கா, போஸ்ட்வானா, ஹாங்காங் ஆகிய மூன்று நாடுகளில் ஒமிக்ரோன் வகை தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 


Pengarang :