ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

சிலாங்கூர் சுல்தானின் 76 வது பிறந்த நாள்- மந்திரி புசார் வாழ்த்து

ஷா ஆலம், டிச 11- மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களின் 76 வது பிறந்தநாளை முன்னிட்டு மாநில அரசு தலைமைத்துவம் மற்றும் மக்கள் சார்பாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

மேன்மை தங்கிய ஆட்சியாளர் இறைவனின் அருளால் நீண்ட ஆயுளுடன் இருக்க தாம் பிரார்த்திப்பதாக அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், துங்கு பெர்மைசூரி மற்றும் அவர்தம் உறவினர்கள் இறைவனின் ஆசியோடும் பூரண ஆயுளோடும் உடலாரோக்கியத்தோடும் இருக்க நான் பிரார்த்திக்கிறேன். 

சிலாங்கூர் ராஜா மூடா துங்கு அமீர் ஷா, அரச குடும்பத்தினர் மற்றும் அவர்களின் உறவினர்களின் நலம் வேண்டியும் மாநில மக்கள் சார்பாக பிரார்த்திக்கிறேன் என்றார் அவர்.

சிலாங்கூர் மக்களின் நலனுக்காகவும் அமைதிக்காகவும் தாமும் மாநில அரசு நிர்வாகமும் தொடர்ந்து பாடுபடுவதற்கு மேன்மை தங்கிய சுல்தான் அவர்கள்  மாநில மக்கள் மீது கொண்டுள்ள அக்கறை வழிகாட்டியாக விளங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :