ECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

புத்ரா பல்கலைக்கழக இணை வேந்தராக துங்கு அமீர் ஷா நியமனம்

ஷா ஆலம், ஜன 16- மலேசிய புத்ரா பல்கலைக்கழக (யு.பி.எம்.) இணை வேந்தராக சிலாங்கூர் ராஜா மூடா துங்கு அமீர் ஷா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த புதன் கிழமை நடைபெற்ற பல்கலைக்கழகத்தின் 44 வது பட்டமளிப்பு விழாவின் போது பல்கலைக்கழகத்தின் வேந்தரான சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல் ஹாஜ் இந்த நியமனத்தைச் செய்து வைத்தார்.

இந்த நியமனம் 2021 அக்டோபர் மாதம் தொடங்கி 2024 அக்டோபர் வரை மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். இந்த நிகழ்வில் நிறை நிலைப் பேராசிரியர் டத்தோ டாக்டர் சோஹாடி பார்டாய் மற்றும் நிறை நிலைப் பேராசிரியர் டான்ஸ்ரீ டாக்டர் ஜலாலுடின் சைட் சலீம் ஆகியோரும் உதவி வேந்தர்களாக நியமனம் பெற்றனர்.

இந்த நியமனச் சடங்கிற்குப் பிறகு துங்கு அமீர் 954 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கியதாக சிலாங்கூர் அரச அலுவலகம் முகநூல் வாயிலாக தெரிவித்தது.


Pengarang :