ECONOMYMEDIA STATEMENTPBTPENDIDIKAN

யாயாசான் சிலாங்கூர் உபகாரச் சம்பளத்திற்கு முதலாம் படிவ மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்- மந்திரி புசார்

ஷா ஆலம், ஜன 26- இவ்வாண்டில் முதலாம் படிவம் செல்லும் மாணவர்கள் யாயாசான் சிலாங்கூர் அறவாரியத்தின் உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப்பம் செய்யும்படி மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார்.

மலேசிய கல்வியமைச்சு-யாயாசான் சிலாங்கூர் அறவாரியத்தின் சிறப்பு கல்வித் திட்டத்தின் கீழ் இந்த உபகாரச் சம்பளம் வழங்கப்படுவதாக அவர் சொன்னார். இது தவிர சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தங்குமிட வசதி, பிரத்தியேக வகுப்புகள் போன்ற சலுகைகளும் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைக் கொண்டுள்ள மாணவர்கள் www.yayasanselangor.org.my  எனும் அகப்பக்கம் வாயிலாக இந்த உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று அவர் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டில் முதலாம் ஆண்டில் நுழையும்  மாணவர்களுக்கான இத்திட்டத்தின் கீழ் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ள்ள 29 பள்ளிகளில் சேர்வதற்குரிய வாய்ப்பு 389 மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இம்மாணவர்களுக்கான கல்விச் செலவுகள் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படும் அதே வேளையில் சிறப்பான அடைநிலைக்கான கல்வித் திட்டங்கள், சுயமேம்பாடு ஆசிரியர்களின் தொடர் கண்காணிப்பு ஆகிய திட்டங்களும் அமல்படுத்தப்படும்.

 


Pengarang :