ALAM SEKITAR & CUACAHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

புற்று நோயாளிகளுக்கு உதவ கென்செல் திட்டம்- சிலாங்கூரில் அறிமுகம்

ஷா ஆலம், பிப் 5- புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள சிலாங்கூர் அரசு  கென்செல் எனும் திட்டத்தை தொடக்கியுள்ளது.

மாநிலத்திலுள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளையும் இலக்காகக் கொண்டு இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இத்திட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து புற்று நோய் சோதனை ஏககாலத்தில் மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.

நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கு ஏதுவாக மேமோகிராம்,கோலோரெக்டல், புரோஸ்தெட் சோதனைகளைமேற்கொள்ளும் வசதி இத்திட்டத்தின் கீழ் ஏற்படுத்தித் தரப்படுவதாகவும்  அவர் குறிப்பிட்டார்.

"சிட்டி கேன்சர் சேலேஞ்ச்" எனும் திட்டத்தின் மூலம் புற்று நோய்த் தடுப்பு திட்டங்களை மாநில அரசு கடந்தாண்டு முதல் முழு கடப்பாட்டுடன் மேற்கொண்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.

ஷா ஆலம், சுபாங் ஜெயா மற்றும் பெட்டாலிங் ஜெயாவில் இத்திட்டம் அமல் படுத்தப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Pengarang :