ANTARABANGSAHEADERADHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

கோழி மற்றும் முட்டையின் தட்டுப்பாடு தற்காலிகமானதே! பயனீட்டாளர் அமைச்சு கூறுகிறது

கோலாலம்பூர், பிப் 5-கோழி மற்றும் முட்டை போன்ற சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தற்போதைய விநியோகத் தட்டுப்பாடு தற்காலிகமானதே என்று உள்நாட்டு வாணிக பயனீட்டாளர் விவகார அமைச்சு கூறுகிறது.
நீண்ட சீனப் புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட தொழில் துறைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியதும் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுவதாக  அமைச்சின் அமலாக்கப் பிரிவு துணை இயக்குநர் சம்சுல் நிஜாம் காலில் கூறினார். 
பெருநாள் காலத்தை முன்னிட்டு பல கால் நடை பண்ணை தொழிலாளர்கள் நீண்ட விடுமுறையில் இருப்பதை கருத்தில் கொண்டு இவ்வாறு கணிக்கப்படுவதாக அவர் சொன்னார். நீண்ட விடுமுறை போன்ற  காரணங்களால் நாட்டின் சில இடங்களில் மூலப்பொருட்களின் பற்றாக்குறை நிலவுவது நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 
இருப்பினும், இது ஒரு தற்காலிக பிரச்சனை  என்று நாங்கள் கருதுகிறோம். உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு மற்றும் விவசாயம் மற்றும் உணவுத் தொழில் அமைச்சு ஆகியவை இப்பிரச்சனையை சரி செய்வதில் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன  என்று அவர் தெரிவித்தார். 

பெர்னாமா  தொலைக்காட்சி ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற "ருவாங் பிச்சாரா" என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அவர் இவ்வாறு சொன்னார்

Pengarang :