ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

கிலோ 8.00 வெள்ளி விலையில் கோழி – 533 கோழிகள் விற்றுத் தீர்ந்தன

ஷா ஆலம், பிப் 11: சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகத்தால் (பி.கே.பி.எஸ்) நிர்வகிக்கப்படும் ஏசான் உணவு விலை கட்டுப்பாடு திட்டத்தின் மூலம் நேற்று ஒரு கிலோ 8.00 வெள்ளி விலையில் மொத்தம் 533 கோழிகள் விற்றுத் தீர்ந்தன.

மொத்தத்தில் 503 கோழிகள் ஸ்ரீ கெம்பாங்கனில் உள்ள சிலாங்கூர் மொத்த விற்பனை சந்தையில் விற்கப்பட்டன, மீதமுள்ளவை விஸ்மா பி.கே.பி.எஸ் செக்சென் 14 இல் விற்கப்பட்டன என்று தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர் முகமது கைரில் முகமது ராஸி கூறினார்.

இரண்டு இடங்களிலும் மொத்தம் 37 அட்டை முட்டைகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இரண்டு இடங்களிலும் சராசரி விற்பனை மிகவும் ஊக்கமளிக்கிறது, உண்மையில் பெரும்பாலான வாங்குபவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் விலையில் திருப்தி அடைந்துள்ளனர் என்று இன்று சிலாங்கூர்கினியை தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

இதற்கிடையில், வாங்குபவர்களிடையே ஊக்கமளிக்கும் வரவேற்பைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களுக்கும் பிரச்சாரத்தை விரிவுபடுத்த தனது தரப்பு தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

சிலாங்கூரில் உள்ள ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதி மற்றும் மாநில சட்டமன்றத்திற்கு பொதுசந்தைகளுக்கும் பொருட்களை விற்பனை செய்ய நாங்கள் செல்வோம், என்று அவர் கூறினார்.

பிப்ரவரி 6 அன்று, டத்தோ மந்திரி புசார் இரண்டு வாரங்களுக்கு சிலாங்கூர் ஒரு கிலோ கோழியை 8.00 வெள்ளி உச்சவரம்பு விலையில் விற்கும் என்று அறிவித்தார்.

உணவுப் பொருட்களின் விலை உயர்வின் சுமையைக் குறைக்க 10 கோடி நிதி மூலம் 50,000 கோழிகள் விற்பனை செய்யப்பட்டதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.


Pengarang :