ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTPBT

ஷா ஆலம், செக்சன் 15 மற்றும் 16 இல் வெள்ள நிதி வழங்கும் பணி இம்மாதம் முற்றுப் பெறும்

ஷா ஆலம், பிப் 13- கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஷா ஆலம், செக்சன் 15 மற்றும் 16 பகுதி மக்களுக்கு பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் உதவி நிதி வழங்கும் பணி இம்மாத இறுதிக்குள் முற்றுப் பெறும்.

அதிக எண்ணிக்கையிலான மனுபாரங்களை பரிலீக்க வேண்டியுள்ளதால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பொறுமை காக்க வேண்டுமாய் ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் எஸ்.பி. சரவணன் கேட்டுக் கொண்டார்.

எனது பார்வையிலுள்ள மாநகர் மன்றத்தின் 5 வது மண்டலப் பிரிவில் 200 பேர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 30 விழுக்காட்டினர் இதுவரை வெள்ள உதவி நிதியாக 1,000 வெள்ளியைப் பெற்றுள்ளனர். எஞ்சியோருக்கு வெகு விரைவில் உதவி நிதி வழங்கப்படும் என்றார் அவர்.

இங்குள்ள கென் ரிம்பா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பொங்கல் கலை கலாசார நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி பெய்த கடும் மழை காரணமாக சிலாங்கூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மிக மோசமாக வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மாநில அரசு 10 கோடி வெள்ளி நிதியில் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

 


Pengarang :