ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோல லங்காட் பண்டார் சௌஜானா புத்ரா எஸ்எம்கே மார்ச் 21 முதல் செயல்படும்

கோலா லங்காட், மார்ச் 18 ;-கோலாலங்காட் பண்டார் சௌஜனா புத்ராவிலுள்ள எஸ்எம்கே ஒப்படைப்பு விழாவில் இன்று மூத்த கல்வி அமைச்சர் டத்தோ ராட்ஸி ஜிடின் கலந்து கொண்டார்.

அப்போது எஸ்எம்கே பண்டார் சௌஜனா புத்ராவின் செயல்பாடு குறித்துக் கருத்து தெரிவித்த ராட்ஸி, படிவம் 1 முதல் படிவம் 4 வரை மொத்தம் 988 மாணவர்கள் மார்ச் 21 ஆம் தேதி பள்ளியில் சேரத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.

எஸ்எம்கே பண்டார் சௌஜனா புத்ரா, அதன் கட்டுமானம் 2019 முதல் கைவிடப் பட்ட பின்னர் 2020 இல் தொடர்ந்தது, முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு மார்ச் மாதத்தில் புதிய பள்ளி பருவத்தில் செயல்படத் தொடங்கும் என்று முன்னர் தெரிவிக்கப் பட்டது.

நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில், தேக்கமடைந்த பள்ளிகளின் வளர்ச்சியை நிறைவு செய்வதற்கான முயற்சிகள் உட்படக் கல்வி உள்கட்டமைப்புக்கு அமைச்சகம் முன்னுரிமை அளித்துள்ளதாக ராட்ஸி கூறினார்.

2022/2023 காலத்திற்கான கல்விப் பள்ளி நாட்காட்டி குறித்துக் கருத்து தெரிவித்த ராட்ஸி, நாடு ஏப்ரல் 1ஆம் தேதி இயல்பு நிலைக்கு மாறினாலும் தொற்று தீவிரம் குறித்து கல்வி அமைச்சு தீவிரமாக கவனித்துவருவதாக கூறினார்.

 


Pengarang :