Kerja pembersihan dilakukan kontraktor Jabatan Pengairan dan Saliran (JPS) di Sungai Jalan Station, Batu Arang berikutan kejadian banjir kilat yang berlaku pada 11 September 2020. Foto Facebook Chua Wei Kiat
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

ஐந்து மாவட்டங்களில் வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க RM2.256 கோடி செலவாகும்

ஷா ஆலம், மார்ச் 18: டிசம்பர் மாத இறுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளை சரிசெய்வதற்கான செலவினம் RM2.256 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் சாலை சரிவு வலுப்படுத்தும் பணி சேர்க்கப்படவில்லை.

இந்த எண்ணிக்கை பாதிக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களில் சாலை பழுது தொடர்பான சிலாங்கூர் பொதுப்பணித் துறையின் (JKR) ஆரம்ப மதிப்பீட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது என்று உள்கட்டமைப்பு மற்றும் பொது வசதிகள் ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஸாம் ஹஷிம் கூறினார்.

“மாரிஸ் (மலேசிய சாலை பதிவு தகவல் அமைப்பு) 2022 ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி, மாநிலத்தில் முன்மொழியப்பட்ட சாலை பழுதுபார்க்கும் பணி வெள்ளத்திற்குப் பிந்தைய உள்கட்டமைப்பு மறுவாழ்வு திட்டத்தின் கீழ் உள்ளது,” என்று அவர் கூறினார்.

இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்ற (டிஎன்எஸ்) அமர்வில் பேரிடர் காரணமாக சிலாங்கூரில் சாலை சீரமைப்பு திட்டம் குறித்து பெர்மாதாங் சட்டமன்ற உறுப்பினர் ரோசானா ஜைனால் அபிடின் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

ஜாலான் சுங்கை லூய், உலு லங்காட் மற்றும் பி 48 ஜாலான் சிப்பாங்-ஜெண்டரம், சிப்பாங்கில் உள்ள பாலம் ஆகியவறுடன் இடிந்து விழுந்த சாலைக் கரையை சரிசெய்வது ஆகியவை முடிக்கப்பட்ட திட்டங்களில் அடங்கும் என்று இந்த விஷயத்தைப் பற்றி விரிவாகக் இஞ்சினியர் இஸாம் கூறினார்.

பெட்டாலிங்கில் உள்ள ஜாலான் ரஹிடின் 2 மற்றும் ஜாலான் பெக்கான் சுபாங்கில் இடிந்து விழுந்த சாலைக் கரையை சீரமைக்கும் பணி பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கியதில் இருந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட பிற பகுதிகளில் பெரும்பாலான ஆய்வுப் பணிகள், இட ஆய்வு மற்றும் சாலை வடிவமைப்பு ஆகியவை நிறைவடைந்து, செயல்முறைக்குக் காத்திருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :