ALAM SEKITAR & CUACAECONOMY

சிகிஞ்சானில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற கூட்டு துப்புரவு இயக்கம்

ஷா ஆலம், ஜூன் 29– கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சிகிஞ்சான், சுங்கை லாபு சுற்றுவட்டாரப் பகுதியில் கூட்டு துப்புரவு இயக்கம் நேற்று மேற்கொள்ளப்பட்டது.

இந்த துப்புரவு இயக்கத்தில் வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் துறை (ஜே.பி.எஸ்), சபாக் பெர்ணம் மாவட்ட மன்றம் ஆகியவையும் பங்கேற்றதாக அந்த திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் தெரிவித்தது.

சுங்கை லாபு கடலோரப் பகுதியில் உள்ள சட்ட விரோத குப்பை கொட்டும் மையங்களை சுத்தம் செய்யும் நோக்கில் இந்த துப்புரவு இயக்கம் நடத்தப்பட்டது.

அந்த பகுதியில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதற்காக கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் மூன்று லோரிகளை வழங்கிய வேளையில் ஜே.பி.எஸ். சார்பில் குப்பை அகற்றும் இயந்திரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.

சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுவதை தடுப்பதற்கு ஏதுவாக குப்பைகளை கண்ட இடங்களில் வீசுவதை தவிர்க்கும்படி அந்நிறுவனம் பொது மக்களை கேட்டுக் கொண்டது.


Pengarang :