ECONOMYMEDIA STATEMENT

துன் சாமிவேலு காலமானார்

கோலாலம்பூர், செப் 15 – மஇகாவின்   தலைவராகவும் மலேசிய  அமைச்சரவையில்  நீண்ட காலம்  அமைச்சராகவும் பதவி வகித்து வந்த துன் சாமிவேலு , தமது 86-வது வயதில் இன்று காலமானார் .

துன் சாமிவேலு, 1979 ஆம் ஆண்டிலிருந்து  2010 -ஆம் ஆண்டு வரை 31 ஆண்டுகள்  மஇகாவை   வழிநடத்தினார்.

அத்துடன்  29 ஆண்டுகள் நீண்ட காலம் அமைச்சரவையில் இருந்து  சேவையாற்றியவர்களில்  இவரும் ஒருவராவர்.

1983 ஆம் ஆண்டிலிருந்து   1989 ஆம் ஆண்டு வரையிலும் பின்னர் மீண்டும்  1995- ஆம் ஆண்டிலிருந்து   2008 -ஆம் ஆண்டு வரையிலும்  பொதுப் பணி அமைச்சராக  துன் சாமிவேலு   சேவையாற்றியுள்ளார்.

மேலும், 1974 -ஆம் ஆண்டிலிருந்து  2008- ஆம் ஆண்டு வரை  சுங்கை சிப்புட்  நாடாளுமன்ற உறுப்பினராகவும்   இருந்துள்ளார் .

தமது தந்தையின்  இறுதிச் சடங்குகளுக்கான  ஏற்பாடுகள்  செய்யப்பட்டு வருவதாக அவரது  புதல்வர்  வேல்பாரி தெரிவித்தார்.


Pengarang :