ACTIVITIES AND ADSECONOMYMEDIA STATEMENTNATIONAL

மகளிர் மேம்பாட்டிற்கான பரிந்துரைகளை கெஅடிலான் மகளிர் பிரிவு முன் வைத்தது

ஷா ஆலம் செப் 28- சமூக பொருளாதார இடைவெளியைக் குறைப்பது உள்பட பல்வேறு துறைகளில் மகளிரை மேன்மையுறச் செய்வதற்கான பரிந்துரைகளை கெஅடிலான் கட்சியின் மகளிர் பிரிவு முன் வைத்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற பொது விவாத நிகழ்வில் கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் மற்றும் நிபுணர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் நிகழ்வில் இந்தப் பரிந்துரைகள் பெறப்பட்டன.

இந்த கலந்துரையாடல் நிகழ்வில் வறுமை மற்றும் மனநலம் சம்பந்தப்பட்ட விவகாரங்களும் விவாதிக்கப்பட்டன. கடந்த ஈராண்டுகளாக சமூக பாதுகாப்பு மீது அவ்வளவாக கவனம் செலுத்தப்படவில்லை. இதன் காரணமாக நடப்பு கட்டமைப்பில் சமநிலையற்றப் போக்கு காணப்படுகிறது என்று   அப்பிரிவு  வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவர் நுருள் இசா அன்வார் மற்றும் மகளிர் பிரிவுத் தலைவி ஃபாட்லினா சீடேக் ஆகியோர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

இந்த பொது விவாத நிகழ்வில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் வருமாறு-

  1. சமூகப் பணியாளர்களை அங்கீகரிக்கவும் மேற்பார்வையிடவும் பாதுகாக்கவும் கூடிய வகையில் சமூகப் பணியாளர் தொழில் சட்ட முன்வரைவு அங்கீகரிக்கப்பட வேண்டும்.
  2. மகளிர் வேலை செய்து கொண்டே சமூகப் பணியில் ஈடுபடுவதற்கு ஏதுவாக சமூகத்தில்  சிறார் பராமரிப்பு முறை உருவாக்கப்பட வேண்டும்.
  3. சட்ட ரீதியான அம்சங்களில் குறிப்பாக குடும்ப வன்முறை வழக்குகளில் சிவில் மற்றும் ஷரியா நீதிமன்றங்கள் வாயிலாக முறையான நீதி கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
  4. உயர்தொழில் திறன் கொண்ட பட்டதாரி மகளிரை இலக்காக கொண்டு பொருத்தமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

5.இணையம் வழி சிறார்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதை தடுக்க சிறார் பாதுகாப்பு கொள்கைள் மேம்படுத்தப்பட வேண்டும்.

  1. அமைச்சு மற்றும் அரசு துறைகளில் பாலினத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் வரவு செலவுத் திட்டத்தை அமல்படுத்துவதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

 


Pengarang :