MEDIA STATEMENTPBT

லாமான் எம்.பி.பி.ஜே.வில் நோன்புப் பெருநாள் விற்பனை- பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

ஷா ஆலம், ஏப் 14- பெட்டாலிங் ஜெயா லாமான் எம்.பி.பி.ஜே. சதுக்கத்தில் இன்று தொடங்கி வரும் ஞாயிற்றுகிழமை வரை நடைபெறவிருக்கும் பி.ஜே. பிலியா மார்க்கெட் ராயா ரஹ்மா நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு பொது மக்கள் அழைக்கப்படுகிறார்கள்.

மாலை 3.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை நடைபெறும் இந்த மூன்று நாள் நிகழ்வில் 20 வணிகர்கள் கலந்து கொண்டு நோன்புப் பெருநாளுக்குத் தேவையான பல்வேறு பொருட்களை விற்பனை  செய்வர் என்று பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் வர்த்தகத் தொடர்பு பிரிவு கூறியது.

நோன்புப் பெருநாளுக்கு தேவையான பொருட்களை வாங்க விரும்புவோர் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி இந்த ரஹ்மா விற்பனை மையத்திற்கு வரும்படி மாநகர் மன்றம் கேட்டுக் கொண்டது.

இந்த மையத்தில், உணவுப் பொருட்கள் பெண்களுக்கான அழகு சாதனங்கள், பலகாரங்கள் உள்ளிட்ட  ஆண், பெண் இருபாலருக்குமான புதிய உடைகள், பயன்படுத்தப்பட்ட உடைகள் ,மற்ற பொருட்களும் விற்கப்படும்.


Pengarang :