ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கழிவுநீர்த் தொட்டியில் ஆடவரின் சடலம் மீட்பு- எட்டு இந்தோனேசியர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ஸ்ரீ இஸ்கந்தர், மே 21– கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் இந்தோனேசிய ஆடவர் ஒருவரின் சடலம் கழிவுநீர்த் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எண்மரை போலீசார் விசாரணைக்காக தேடி வருகின்றனர்.

அந்த எட்டு இந்தோனேசியப் பிரஜைகளும் கொலையுண்ட நபருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தவர்கள் என்று பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ யுஸ்ரி ஹசான் பாஸ்ரி கூறினார்.

கோல கங்சாரில் கடந்த 14ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இதன் தொடர்பான விசாரணை அறிக்கை தயாரிக்கப்படும் வேளையில் அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக அது சட்டத் துறை துணைத் தலைவர் அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்படும் என அவர் சொன்னார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு இதில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்வதற்கு எங்களுக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

நேற்றிரவு பேராக் தெங்கா மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற பேராக் மாநில போலீஸ் தலைமையக நிலையிலான நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் தலைமறைவாக இருந்து வரும் கணவன்-மனைவியை குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணைக்காக தாங்கள் தேடி வருவதாக கோல கங்சார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஓமார் பக்தியார் யாக்கோப் கடந்த 15ஆம் தேதி கூறியிருந்தார்.

ஸ்ரீ இஸ்கந்தர், மே 21- கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் இந்தோனேசிய ஆடவர் ஒருவரின் சடலம் கழிவுநீர்த் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எண்மரை போலீசார் விசாரணைக்காக தேடி வருகின்றனர்.

Pengarang :