ECONOMYMEDIA STATEMENTSELANGOR

தமிழர் கலை வளர்க்கும்  பணியில் முன்னணி  துவான் டாக்டர் குணராஜ்

கிள்ளான். மே.28- சிலாங்கூர் மாநில செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் துவான் டாக்டர் குணராஜ் தலைமையில் சிலாங்கூர் சிறுவர் பாடல் திறன்  போட்டி சிறப்பாக நடைபெற்றது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில்  ஹெமித்திரா இரவிசந்திரன் ரி.ம. 2,000.00 ரொக்கமும் வெற்றிக் கேடயத்தையும் தட்டி சென்றார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த ” சிலாங்கூர் சிறுவர் பாடல் திறன் ” . இவ்வாண்டு 130 சிறுவர்கள் முதல் சுற்றில் கலந்து கொண்டனர். அரையிறுதி சுற்று கடந்த 5 ஆம் தேதி கிள்ளானில் சிறப்பாக நடைப்பெற்று முடிந்தது. இதில் 22 பேர் வெற்றி பெற்றனர்.

இறுதி சுற்று நேற்று 10 பேருடன் நடைபெற்றது. போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பாக தங்களது பாடல் திறனை வெளிப்படுத்தினர். தமிழ் நாட்டு கலைஞர்களுக்கு ஈடு கொடுக்கும் அளவில் தங்களது பாடல் திறனை வெளிப்படுத்தினர் என்று நீதிபதிகள் புகழாரம் சூட்டினர்.

இந்த போட்டி நிகழ்ச்சியில் முதல் பரிசு ரி.ம. 2,000.00, இரண்டாவது பரிசு ரி.ம. 1,500.00, மூன்றாவது பரிசு ரி.ம. 1,000.00, நான்காவது பரிசு ரி.ம. 750.00, ஐந்தாவது பரிசு ரி.ம. 500.00 மற்றும் 6 முதல் 10 வது வரையிலான 5 வருக்கு ஆறுதல் பரிசாக தலா ரி.ம. 300.00 வழங்கப் பட்டது.

இந்த போட்டி நிகழ்ச்சியில் செல்வன் ஹரிந்திரன் மோகன் இரண்டாவதாக ரி.ம. 1,500.00 ரொக்கமும் பரிசு கேடயத்தையும் தட்டி சென்றார். மூன்றாவதாக ஜனனி ஜெயகோபி ரி.ம. 1,000.00 மற்றும் கேடயத்தையும் தட்டிச் சென்றார்.

இந்த இறுதிச் சுற்றுக்கு தேர்வான அனைவருக்கும் நாடறிந்த புகழ்பெற்ற கலைஞர்களால் முறையாக பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் மேடையில் பாடி, வந்திருந்த பார்வையாளர்களை மகிழ்ச்சி படுத்தினர்.

இப்போட்டி நிகழ்ச்சியின் வழி நாட்டுக்கு நல்ல தரமான கலைஞர்களை உருவாக்குவதில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் முன்னணி வகிக்கிறார் என்றால் அது மிகையாகாது.

தமிழ்நாட்டில் நடைபெறும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு போட்டியாளர்களையும் நிகழ்ச்சியையும் மிகவும் சிறப்பாக நடத்தி முடித்தார் டாக்டர் குணராஜ். இந்நிகழ்ச்சியில் கிள்ளான் நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ, அறப்பணி வேந்தர் செந்தமிழ் செல்வர் ஓம்ஸ் ப.தியாகராஜன், சிலாங்கூர் மாநில தமிழ் கலைஞர்கள் இயக்கத்தினர், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிட தக்கது


Pengarang :