ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

கெடாவில் வெள்ளம்- 1,383 பேர் 12 துயர் துடைப்பு மையங்களில் தஞ்சம்

அலோர்ஸ்டார், செப் 30- கெடா மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இன்று காலை 8.00 மணி நிலவரப்படி அம்மாநிலத்தில் 420 குடும்பங்களைச் சேர்ந்த 1,383 பேர் துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர். நேற்றிரவு 8.00 மணியளவில் இந்த எண்ணிக்கை 468 குடும்பங்களைச் சேர்ந்த 1,550 பேராக இருந்தது.

அவர்கள் அனைவரும் குபாங் பாசு, கோத்தா ஸ்டார், பெக்கோக் செனா மற்றும் பாலிங் ஆகிய மாவட்டங்களில் உள்ள 12 நிவாரண மையங்களில் தங்கியுள்ளதாக மலேசிய பொது தற்காப்புப் படையின் கெடா மாநில பேரிடர் மேலாண்மை செயலகத்தின் தலைவர் மேஜர் முகமது சுஹாய்மி முகமது ஜைன் கூறினார்.

குபாங் பாசு மாவட்டத்தில் உள்ள ஒரு துயர் துடைப்பு மையத்தில் ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்த 53 பேர் தங்கியுள்ள வேளையில் பொக்கோ செனா மாவட்டத்தில் உள்ள இரு நிவாரண மையங்களில் 48 குடும்பங்களைச் சேர்ந்த 201 பேர் அடைக்கலம் நாடியுள்ளனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வானிலை சீரடைந்து வருவது மற்றும் வெள்ள நீர் வடிந்து வருவது ஆகியவை நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, சுங்கை அனாக் புக்கிட் ஆற்றின் தாமான் அமான் பகுதியில் நீர் மட்டம் அபாய அளவில் அதாவது 2.93 மீட்டராக உள்ளதாக வடிகால் மற்றும் நீர் பாசனத் துறையின் பொது தகவல் அகப்பக்கம் கூறியது.


Pengarang :