ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரில் இவ்வாண்டில்  3 வது  கட்டமாக 53 ஆலயங்களுக்கு    5 லட்சம் ரிங்கிட்  மானியம்

கிள்ளான்.நவ.5-   சிலாங்கூரில் உள்ள 53 இந்து ஆலயங்களுக்கு ரிங்கிட் மலேசியா 515,000.00 நிதியுதவி வழங்கப்பட்டது. நேற்று சிலாங்கூர் மாநில அளவிலான தீபாவளி கொண்டாட்டம் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தால் நடத்தப் பட்டது. இந்த நிகழ்வில் 53 ஆலயங்களுக்கு சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு தலைமையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அனைத்து ஆலய பொறுப்பாளர்களும் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி எடுத்து வழங்கி சிறப்பித்தார்.

கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து சிலாங்கூர் மாநில அரசு  முறையாக பதிவு பெற்ற ஆலயங்களுக்கு நிதியுதவி செய்து வருகிறது. இந்த நிதியுதவி திட்டத்தை அன்றைய ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் தொடங்கி வைத்தார். கடந்த 15 ஆண்டுகளாக சிலாங்கூர் மாநில அரசு தொடர்ந்து எந்தவித பாகுபாடும் இல்லாமல் நிதியுதவி செய்து வருகிறது.

இதில் சிலாங்கூரில் உள்ள பெரிய ஆலயங்களும் , சிறிய ஆலயங்களும், தோட்டப் புறத்தில் உள்ள ஆலயங்களும் நிதி பெற்று பலனடைகின்றன.
இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல தலைவர்கள் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடுவுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

சில ஆலயங்களுக்கு தொடர்ந்து பல ஆண்டுகளாக நிதியுதவி கிடைத்து வருகிறது. இதனால் ஆலய மேம் பாட்டுக்கு பெரும் பங்களிப்பாக இருக்கிறது. மேலும் சமூக மேம்பாட்டு திட்டங்களும் மேற்கொள்ள உதவுகிறது.

குறிப்பாக கோவிட் 19 பெருந்தொற்று காலத்தில் இந்தியர்கள் எதிர்நோக்கிய உணவு  பற்றாக்குறை பிரச்சனை   தீர்க்க   இலவசமாக சமையல் உணவு பொருட்கள் வழங்கினார்கள்.  தற்போது சில ஆலயங்கள் ஆலய வளாகத்தில் பாலர் பள்ளியும் நடத்தி வருகிறோம் என்று கூறின.

சிலாங்கூர் மாநில அரசு வழங்கி வரும் நிதியுதவியால் தான் ஆலய வளர்ச்சியோடு இந்திய சமூக மேம்பாடும் வெற்றிகரமாக செய்ய முடிகிறது என்று கிள்ளான் பண்டார் புத்ரா ஆலயத் தலைவர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.


Pengarang :