SELANGOR

104 சட்டவிரோத நெகிழி தொழிற்சாலைகள் மூடப்பட்டன!

கிள்ளான், ஜன்.23:

சட்டவிரோதமாக செயல்பட்ட மொத்தம் 104 உரிமம் இல்லாத நெகிழி தயாரிப்பு தொழிற்சாலைகளை கிள்ளான் நகராண்மைக் கழகமும் கோலலங்காட் மாவட்ட மன்றமும் சீல் வைத்துள்ளன.

இதுவரை எம்பிகே 71 தொழிற்சாலைகளையும் எம்டிகேஎல் 33 தொழிற்சாலைகளையும் சீல் வைத்துள்ளதாக ஊராட்சி, கம்போங் பாரு பொது போக்குவரத்து மற்றும் மேம்பாட்டு துறை ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்,

கிள்ளான் துறைமுகம் வழியாக மாநிலத்திற்குள் சட்டவிரோத நெகிழி பொருட்கள் அதிகளவு காணப்பட்டதைத் தொடர்ந்து சுற்றுச் சூழல் துறையும் குடிநுழைவு துறையும் கூட்டாக நடத்திய சோதனை நடவடிக்கையில் இந்த தொழிற்சாலைகள் அடையாளம் காணப்பட்டன என்றார் அவர்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இரு துறைகளும் குற்றமிழைக்கும் தரப்புகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் என்று அவர் எச்சரித்தார்.

மேலும், இதில் ஊராட்சி துறையும் சம்பந்தப்பட்டுள்ளதால், இத்துறையும் அதே போன்ற நடவடிக்கையை எடுக்கும் என்று இங்குள்ள தெலுக் கோங்கில் ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கைக்குப் பின்னர் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் இங் தெரிவித்தார்.


Pengarang :