NATIONALRENCANA PILIHAN

நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் கொடுத்து, பிரதமரின் அதிகாரத்தை கட்டுப்படுத்த வேண்டும்

ஷா ஆலம், செப்டம்பர் 9:

நாடாளுமன்றம், பிரதமர் எடுக்கும் முடிவுகளை எதிர்த்து குரல் கொடுக்க அதிகாரத்தை வழங்க வேண்டும். பிரதமர் தமது அதிகாரத்தை பயன்படுத்தி முக்கிய நியமனம் செய்யும் நடைமுறையை மாற்றப்பபட வேண்டும் என்று சிலாங்கூர் பல்கலைக் கழகத்தின் (யுனிசெல்) துணை இணை வேந்தர் பேராசிரியர் முனைவர் ஷாருடீன் படாரூடீன் கூறினார். நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு பிரதமரின் அதிகாரத்தை குறைக்கலாம் என்றார்.

”   அமெரிக்காவில் அதிபருக்கு பதவிகள் நியமனம் செய்யும் அதிகாரம் உண்டு. ஆனால் அமெரிக்க காங்கிரஸ் இந்த நியமனங்களை ஆதரிக்கவும் அல்லது எதிர்க்கும் அதிகாரம் உண்டு,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

parlimen

 

 

 

 

 

மலேசியாவில் தற்போது பிரதமரின் ஆலோசனைக்கு ஏற்ப மேன்மை தங்கிய பேரரசர் நியமனம் செய்வது நடைமுறையில் உள்ளது. ஷாருடீன் மேலும் கூறுகையில், பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி, பிரதமர் பதவியை ஒருவர் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே இருக்க முடியும் என்ற முடிவு சரியானது என்று பாராட்டினார்.

#கேஜிஎஸ்


Pengarang :