MEDIA STATEMENT

வேலை நீக்கம் செய்யப்படும் தொழிலாளர்களுக்கு காப்புறுதி அவசியம்

நாட்டில் வேலை நீக்கம் செய்யப்படும் தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதரத்தை சமாளிக்க தொழிலாளர் காப்புறுதி திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என கெஅடிலான் இளைஞர் அணி தலைவர் நிக் நஷ்மின் நிக் அமாட் கோரிக்கை விடுத்தார்.

நாட்டினை நன் முறையில் வழிநடத்த நடப்பு அரசாங்கம் தவறியதால் நாடு நிலையற்ற பொருளாதார சூழலை எதிர்நோக்கியிருக்கும் நிலையில் அதிகமான வேலை நீக்கங்களும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.கடந்தாண்டில் மட்டும் சுமார் 37,699 தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் நினைவுக்கூர்ந்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டில் வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,343ஆக இருந்த நிலையில் கடந்தாண்டு அஃது குறைந்திருந்தாலும் நடப்பியல் சூழலில் தொழிலாளர் காப்புறுதி திட்டம் வேலை இழக்கும் தொழிலாளர்களும் பெரும் நன்மையாக அமையும் என்றார்.

வேலை இழக்கும் தொழிலாளர்கள் அடுத்த வேலையினை தேடி பெறும் வரை இந்த காப்புறுதி அவர்களுக்கு ஓரளவும் பெரும் உதவியாக இருக்கும் என கூறிய அவர் இத்திட்டத்தை உருவாக்குவதற்கு தேசிய முன்னன்ணி அரசாங்கம் விவேகமாய் முன் வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் சுமார் 6.5 மில்லியன் தொழிலாளர்கள் நன்மை அடைய முடியும் என தாம் நம்புவதாகவும் கூறிய அவர் வேலை இழக்கும் தொழிலாளர்களுக்கு இத்திட்டம் அவர்களின் வாழ்வாதார சுமையை குறைக்க பங்காற்றும் என்றும் கூறினார்.

பல்வேறு தரப்பின் விவேகமான கோரிக்கையாக இஃது எழுந்துள்ள நிலையில் நாட்டின் முதலாளிகள் சங்கம் இதற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த திட்டத்தை முதலாளிகள் சங்கம் எதிர்ப்பதும் முறையற்ற செயல் என்றும் அவர் கூறினார்.

 

 

உருவாக்கப்படும் மற்றும் ஒதுக்கப்படும் தொழிலாளர் காப்புறுதி திட்ட நிதி சுதந்திரமான முறையில் நிர்வாகிக்க வேண்டும்.இதில் எவ்வித முறைகேடுகளும் தவறான கையாடல்களும் இருத்தல் கூடாது எனறும் அவர் நினைவுறுத்தினார்.

 


Pengarang :