PBTSELANGOR

வீட்டை வியபார தளமாய் உருமாற்றி 30பேருக்கு நோட்டிஸ் வழங்கப்பட்டது

காஜாங் – தங்களின் வீடுகளை வியபார தளமாக உருமாற்றம் செய்திருந்த சுமார் 30 பேருக்கு காஜாங் மாநகர மன்றம் எச்சரிக்கை நோட்டிஸ் வழங்கியதோடு அபதாரமும் விதித்தது.

சட்டவிரோதமாய் வியபாரத்தை மேற்கொள்வோருக்கு எதிராய் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் போது தங்களின் வீடுகளை வியபார தளமாய் உருமாற்றம் செய்திருப்போம் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர்கள் மீது உடனடி நடவடிக்கையாக இஃது அமைந்திருப்பதாக அதன் தலைவர் முகமட் சாயூதி பக்கர் தெரிவித்தார்.

உருமாற்றம் செய்யப்பட்டு நீண்டக்காலமே அவர்கள் அந்தப் பகுதிகளில் வியபாரத்தை மேற்கொண்டு வருவதும் கண்டறியப்பட்டதாக கூறிய அவர் அதில் பெரும்பான்மையோர் மலிகை கடைகளாய் தங்களின் வீடுகளை உருமாற்றம் செய்திருந்ததாகவும் கூறினார்.

 

 

அனைத்து தரப்பினரும் சட்ட விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர் அந்தந்த செயல்பாடுகளுக்கு ஒப்ப அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.அதேவேளையில்,நீண்டக்காலமாய் அவர்கள் வியபாரத்தை மேற்கொண்டிருந்தாலும் இந்த விவகாரத்தில் எவ்வித சமரசமும் இல்லை என்றும் அவர்கள் அனைவரும் தங்களின் வியபார தளத்தை மீண்டும் வீடுகளாய் மாற்றிதான் ஆக வேண்டும் என குறிப்பிட்டார்.

 


Pengarang :