Majlis Perbandaran Subang Jaya (MPSJ)
PBTSELANGOR

சுபாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் 9வது ஆண்டு’Jom Konvoi’ நிகழ்வு

சுபாங் ஜெயா – மக்களின் பயன்பாட்டிற்கும் அவர்களின் வசதிக்கும் அடிப்படைத் தேவைகளுக்கும் ஏற்றவாறும் ஒவ்வொன்றையும் நிறைவாக வழங்குவதிலும் கவனம் செலுத்தி வரும் சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் இளைய சமூகத்தின் மேம்பாட்டிலும் தனித்துவ் அக்கறை செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில் 9வது ஆண்டாய்  ‘Jom Konvoi Kembara Amal MPSJ 2017’ எனும் கருப்பொருளில் இளைஞர்களுக்கான மாபெரும் ஒன்றுக்கூடல் நிகழ்வினை ஏற்பாடு செய்திருப்பதாகவும் இந்நிகழ்வில் சுமார் 769 கி.மீட்டர் தூரம் இளைஞர் பயணிப்பார்கள் என்றும் அதன் தலைவர் டத்தோ நோர் இஸாம் அமாட் டாலான் தெரிவித்தார்.

வரும் ஏப்ரல் 27ஆம் தொடங்கி மே 1ஆம் தேதி வரையில் நடைபெரும் இந்நிகழ்வில் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்த் நிகழ்வுகள்,கொத்தோங் ரோயோங் சமூக பணிகள்,திருமண நிகழ்வுகள்,விசையுந்து பயணம் உட்பட சமூக அக்கறை செயல்பாடுகளோடு பல்வேறு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

 

இந்த நிகழ்வின் மூலம் இளம் தலைமுறையினர் பல்வேறு அனுபவங்களையும் தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியும் என நம்பிக்கை தெரிவித்த அவர் சுற்றுச்சூழல் பாதுக்காப்பு குறித்த விழிப்புணர்வோடு சாலை விதிமுறை மற்றும் அதன் பயன்பாடுகளோடு பாதுக்காப்பான பயண மேற்கொள்ளுதலையும் கற்றுணர முடியும் என்றார்.

இந்நிகழ்விற்கு சுபாங் ஜெயா நகராண்மைக் கழகத்தோடு போக்குவரத்து இலாகா,சமூகநலன் இலாகா,ஊராட்ச்சி மன்றங்கள் உட்பட பல்வேறு அமைப்புகளும் அரசு சார இயக்கங்களும் அரசு நிறுவனங்களும் பெரும் ஒத்துழைப்பையும் பங்களிப்பினையும் வழங்குவதாகவும் கூறினார்.

தொடர்ந்து 9வது ஆண்டாய் நடைபெறும் இந்நிகழ்வின் மூலம் விவேகம்,ஆற்றல்,தூரநோக்கு சிந்தனை,நன் இலக்கும் கொண்ட இளம் தலைமுறையினரை உருவாக்க முடியும் என எம்பிஎஸ்ஜெ நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் இந்நிகழ்வு குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

 


Pengarang :