SELANGOR

மந்திரி பெசார்: சிலாங்கூர், மலேசிய நாட்டை உருவாக்க பங்கு வகிக்கிறது

பெட்டாலிங் ஜெயா, மே 20:

சிலாங்கூர் ஒரு மாநிலமாக இருந்தாலும் பொருளாதார மறுமலர்ச்சிக்கும் மற்றும் மக்களின் நல்வாழ்வு மேம்படுத்தவும் மத்திய அரசாங்கத்தை விட பன்மடங்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது என்று கெஅடிலான்யின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். சிலாங்கூரின் அர்ப்பணிப்பு இல்லாமல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலைத்தன்மையாக இருக்காது என்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிலாங்கூர் மக்களின் பங்களிப்பு 25% என்ற நிலையில் இருப்பதை யாரும் மறுக்க முடியாது என்றார்.

”   2016-இல்  மொத்த முதலீடு ரிம 7.88 பில்லியன் ஆகவும் 242 மேம்பாட்டு திட்டங்களும் ஏற்படுத்தப் பட்டு நாட்டிலே முதல் நிலையில் இருப்பதாகவும், இது சிலாங்கூர் மாநிலத்தின் சிறந்த நிர்வாகம், நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாக செயல்பாடுகள் காரணத்தால் முதலீட்டாளர்களை  கவர முடிகிறது என்றால் மிகையாகாது. அனைத்துலக சமூகம் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் வெற்றிகளுக்கு அங்கீகாரம் கொடுத்து உலக ரீதியிலான விவேக மாநிலமாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். நமது அதிகாரப்பூர்வ தைவான், சிங்கப்பூர், ஜெர்மனி பயணங்களில் வணிக சமூகம் சிலாங்கூர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து, சிலாங்கூர் முதலீடு செய்வதற்கு சிறந்த ஒரு இடமாக இருக்கும் அனைத்து தகுதி களும் உண்டு என்பதை சுட்டிக் காட்டியுள்ளது என்னால் மறக்க முடியாத நினைவுகள்,” என்று கூறினார்.

சிலாங்கூர் மாநில மந்திரி பெசாருமான முகமட் அஸ்மின் அலி, மேற்கண்ட தகவல்களை சிவிக் மண்டபத்தில் நடைபெற்ற கெஅடிலான் கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் தேசிய மாநாட்டில் உரையாற்றிய போது கூறினார்.


Pengarang :