MTUC gesa kerajaan beri elaun sara hidup RM500 sebulan atau lebih kepada pekerja swasta ekoran kos sara hidup yang tinggi di negara ini.
MEDIA STATEMENT

சட்ட விரோத அந்நிய தொழிலாளர் அதிகரிப்பு, தொழிலாளர் கொள்கை மற்றும் அமலாக்கத்தின் தோல்வி ஆகும்

அண்மையில் வெளிவந்த தகவலின் படி, குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸ்ரீ முஸ்தாபார் அலி கூறுகையில் 85,000 சட்ட விரோத அந்நிய நாட்டு தொழிலாளர்களை தமது இலாகா இ-காட் மூலம் தற்காலிகமாக பதிந்து விட்டதாக தெரிவித்தார். இந்த எண்ணிக்கையை பார்க்கும் பொழுது அரசாங்கத்தின் இலக்கான  400,000 இருந்து 600,000 வரை சட்ட விரோத அந்நிய நாட்டு தொழிலாளர் பதிவு தோல்வி அடைந்தது என்று கூறலாம்.

மலேசிய தொழிற்சங்கம் காங்கிரஸ் (எம்டியூசி) புள்ளி விவரங்கள் வழி சட்ட விரோத அந்நிய நாட்டு தொழிலாளர் எண்ணிக்கை 5 மில்லியனை எட்டியது என்று விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால் மனிதவள அமைச்சு அறிக்கையின் அடிப்படையில் சட்ட விரோத அந்நிய நாட்டு தொழிலாளர்கள் 4 மில்லியன் மட்டுமே இருப்பதாக தெரிவித்தது.

மலேசிய தொழிலாளர்களின்  எதிர்காலம் மற்றும் நோக்கம் என்ன? அரசாங்கம் சட்ட விரோத அந்நிய நாட்டு தொழிலாளர்களை மலேசியா நாட்டிற்கு வரவேற்கிறதா? இதில் லஞ்ச ஊழல் சம்பந்தப்பட்டதாக கூறுவதில் உண்மை உண்டா? சட்ட விரோத அந்நிய நாட்டு தொழிலாளர்களை அதிகாரப்பூர்வமாக மாற்றும் நடவடிக்கை என்னவாயிற்று?

சட்ட விரோத அந்நிய நாட்டு தொழிலாளர்களை அதிகாரப்பூர்வமாக மாற்றும் நடவடிக்கைகள் தோல்வி தழுவிய நிலையில், முதலாளிகள் லாபத்திற்காக இந்த நடவடிக்கையை விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதலாளி வர்க்கத்தின் மிரட்டல்கள் வழி சட்ட விரோத அந்நிய நாட்டு தொழிலாளர்கள் அதிகாரப்பூர்வமாக மாற்றும் நடவடிக்கையில் பதிவு செய்யவில்லை. இந்த ஆண்டு ஜூன் 30 – குள் பதிவு செய்ய வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது வீண் விரயமே ஏனெனில் சட்ட அமலாக்க கடுமையாக இல்லை என்று தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

* டத்தோ அப்துல்லாமற்றும் சானியா

கோலா லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர்

தொழிலாளர் பிரிவு தலைவர்

மக்கள் நீதி கட்சி


Pengarang :