MEDIA STATEMENT

ஒவ்வொரு முறையும் அமைச்சர் மாறும் போது மாணவர்கள் ‘ஆய்வக எலி’ ஆக ஆளாகிறார்கள்

டத்தோ ஸ்ரீ டாக்டர் எட்மண்ட் சந்தாரா:

அண்மையில் வெளிவந்த அம்னோ தேசிய இளைஞர் பிரிவு உதவித்   தலைவர் கைருல் அஸ்வான் ஹாருன் அவர்களின் அறிக்கையில் தேசிய மாதிரி ஆங்கிலப் பள்ளியை நாட்டின் கல்வி பாடத்திட்டத்தில் அதிகாரப்பூர்வ மொழியாக பயன்படுத்த வேண்டும் என்று கூறியதை மேற்கோள்காட்டி நான் கருத்து கூற விரும்புகிறேன்.

கைருல் அஸ்வான் ஹாருன் அவர்களின் அறிக்கை வெறும் கண்துடைப்பு நாடகமே. பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் ஒரு இனத்தை அடிப்படையாகக் கொண்டு ஓட்டு சேகரிக்க அவரது அறிக்கை காட்டுகிறது. நான் ஆங்கில மொழியை பிடிக்காமல் பேசவில்லை, ஆனால் எதார்த்தமாக பேசுகிறேன். இந்த நாட்டில் ஆங்கிலப் பள்ளிகள் உருவாகும் வாய்ப்பு இல்லை. ஆனால் நாட்டின் கல்வி சட்டம் மற்றும் தேசிய கல்வி திட்டத்தை மாற்றம் செய்தால் மட்டுமே ஆங்கிலப் பள்ளியை ஆரம்பிக்க முடியும்.

நமது தேசிய கல்வி திட்டம் ஒவ்வொரு முறையும் அமைச்சர் மாற்றம் அடியும் போது திட்டங்களும் மாற்றம் காணும். பள்ளி மாணவர்கள் ‘ஆய்வக எலி’ ஆக அம்னோ தேசிய முன்னணி அரசாங்கம் மாற்றி உள்ளது.

PELAJAR SEKOLAH

 

 

 

 

 

மலாய் மொழியை தேசிய மொழியாக பயன்படுத்தி வருவதை மேலும் பலப்படுத்தலாம். அதேவேளையில் ஆங்கில மொழி பயன்பாடு குறித்து கவனம் செலுத்த வேண்டும். ஆங்கில மொழியில் பலவீனமான மாணவர்களுக்கு கூடுதல் வகுப்புகள் ஏற்படுத்தி மொழி வளத்தை அதிகரித்து கொள்ளலாம்.

அம்னோ தேசிய முன்னணியின் இன அடிப்படையில் ஆசிரியர்களை தயார் செய்யும் நிலை நாட்டின் கல்வி திட்டத்தை மேம்படுத்தும் என நான் நினைக்கவில்லை. மேலும், கல்வி ஒதுக்கீடு ஒவ்வொரு வருடமும் குறைந்து கொண்டே வருகிறது. திறன் மிக்க மாணவர்கள் மேல் கல்வியை தொடர முடியாமல் போவது நாட்டிற்கு பேரிழப்பு.

*டத்தோ ஸ்ரீ டாக்டர் எட்மண்ட் சந்தாரா

கெஅடிலான் கட்சியின் ஒருங்கிணைப்பு பிரிவு தலைவர்


Pengarang :