NATIONAL

கெஅடிலான் இளைஞர் அணியினர் விடுதலை, அமைதி பேரணி உரிமைக்கு சான்று

ஷா ஆலம், மே 31:

இரண்டு கெஅடிலான் இளைஞர் அணியினர் விடுதலை மக்களின் பேரணி உரிமைக்கான வெற்றி. இளைஞர் அணியினர் கோலாலம்பூர் மாநகர மன்றத்தின் அதிகாரிகளை #practIGP ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போது தடுத்ததாக மார்ச் 2015-இல் குற்றம் சாட்டப்பட்டனர் குறிப்பிடத்தக்கது.

கெஅடிலான் கட்சியின் தேசிய இளைஞர் பிரிவு தலைவர் நிக் நஸ்மி நிக் அமாட் விவரிக்கையில், தாம் இதை வரவேற்பதாக கூறினார். கைது செய்யப்பட்ட கெஅடிலான் கட்சியின் தேசிய செயலாளர் சாங் லீ காங், தேசிய உதவி தலைவர் தான் கார் எங் மற்றும் மேலும் நான்கு பேர் குற்றச்சாட்டு இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

”   நீதிபதியின் அதிரடி முடிவு அமைதி பேரணி சட்ட ரீதியாக அதிகாரப்பூர்வமானது. அரசாங்க அதிகாரிகள் பேரணிகள் நடத்தும் போது பொது மக்களை சிரமப் படுத்தக்கூடாது. பேரணி நடத்தும் உரிமைக்கு இது ஒரு மாபெரும் வெற்றி. இதை தடுக்க முயலும் சில தரப்பினருக்கு படுதோல்வியை இந்த தீர்ப்பு ஏற்படுத்தி உள்ளது,” என்று கூறினார்.

நிக் நஸ்மி நிக் அமாட் விவரிக்கையில், அரசாங்கம் மற்றும் அரசு வழக்கறிஞர் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடாது என்று கேட்டுக் கொள்வதாக கூறினார்.


Pengarang :