MEDIA STATEMENT

பொருட்கள் விலை ஏற்றம்: அரசாங்கத்தின் தோல்வி ஒரு ஏமாற்றம்

பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்ட பிறகு பொருட்கள் விலை ஏற்றம் மிக சாதாரணமாகி விட்டது. இந்த சூழ்நிலை பெருநாள் காலங்களில் குறிப்பாக நோன்பு மாதத்தில் மோசமான நிலையில் இருப்பதாக ஒத்துக் கொள்ள வேண்டும். இந்த ஆண்டு ரமலான் மாதம் மக்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் குறிப்பாக குறைந்த வருமானம் பெரும் குடும்பத்தினர் நிலைமை மோசமாகி வருகிறது என்றால் மிகையாகாது. வாழ்க்கை செலவீனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொருட்களின் விலை அரசாங்கத்தின் கட்டுப்பாடு மீறிய அளவில் உள்ளது.

ரமலான் மாதத்தை நெருங்கும் வேளையில், பொது மக்கள் அடிப்படை பொருட்கள் விலை ஏற்றம் மிக சாதாரணமாக இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டி வருகிறார்கள். இந்த விலை ஏற்றதில் கோழி, மீன், இறைச்சி போன்ற அன்றாட தேவைக்குறிய பொருட்கள் அடங்கும். இதேபோல ரமலான் கடை வியாபாரிகளும் தங்களின் வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். வியாபார பொருட்கள் விலை ஏற்றம் காணும் போது தங்களின் வியாபாரத்தில் விலை உயர்வு செய்தால் மட்டுமே லாபம் கிடைக்கும். இந்த சூழ்நிலையில் பொருட்களின் விலை ஏற்றம் தொடர்ந்து கட்டுக்குள் அடங்காது தலைவிரித்தாடுகிறது.

ஆகவே வியாபாரிகள், விலையை ஏற்றவில்லை என்றால் கண்டிப்பாக நஷ்டம் ஏற்படும். ஆக வியாபாரிகள் தங்களின் வாணிபத்தை தொடர்ந்து ஈடுபட விலையை ஏற்றியே ஆக வேண்டும். இந்த சூழ்நிலையில், உள்நாட்டு வாணிபம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் அமைச்சு விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதால் அதன் பொறுப்பில் தோல்வி அடைந்ததாகவே அர்த்தம்.

அமைச்சு பொருட்கள் விலை ஏற்றதில் மொத்த வியாபாரிகளை தொடர்ந்து குறை கூறி வருகிறது என்றால் மிகையாகாது. அதன் கடமையை உணராமல் மற்றவர்களை குறை சொல்ல முடியாது. அமைச்சு தனது அதிகாரத்தை செயல் படுத்தி பொருட்கள் விலை ஏற்றத்தை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். விலை ஏற்றதில் நடவடிக்கை எடுக்க முடியாத சூழ்நிலை நாட்டுக்கு பெரிய அளவில் ஏமாற்றமே.

மலேசிய அரசாங்கம் தனது அரசு இயந்திரங்களை சரியான முறையில் பயன்படுத்தி விலை உயர்வை தடுக்க வேண்டும். அரசு நிறுவனங்களை மறுமலர்ச்சி செய்து பொறுப்புள்ள மற்றும் விவேகமாக செயல்பட வேண்டிய முயற்சிகள் எடுக்க வேண்டும்.

* முகமட் சானி ஹூம்சான்

அமானா கட்சியின் தேசிய இளைஞர் பிரிவு தலைவர்


Pengarang :