MEDIA STATEMENT

வாணிப வாய்ப்புக்கு ‘கேபள்’ மற்றும் பதவி பலம் வேண்டும் என்றால் போட்டியிடும் திறன்மிக்க நாடு என்பதில் பலனில்லை

அம்னோ தேசிய முன்னணி அரசாங்கம், 63 போட்டியிடும் திறன் கொண்ட பொருளாதார நாடுகளில் 24வது இடத்தில் உள்ளது என மார்தட்டிக் கொள்ளும் அறிக்கைகள் அனைவரும் அறிந்ததே(ஆனாலும் மலேசியாவின் தரவரிசை சரிந்தது என்றும் 2016-இல் நம் நாடு 61 நாடுகளில் 19வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது).

உற்பத்தி திறன் குறைந்த நிலையில் போட்டியிடும் திறன் குறையும், இது மத்திய அரசாங்கத்தின் பொதுச் சேவை மற்றும் தனியார் ஊழியர்களின் ஊதியம் உயர்வு ஏற்பட முயற்சி எடுக்காததே ஆகும். மேலும் தனியார் நிறுவனங்களின் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி (ஆர்&டி) உதவி நிதி இல்லாத சூழ்நிலையில் தொழில் நுட்பத்தை மேம்படுத்த முடியாமல் அந்நிய நாட்டு தொழிலாளர்களை நம்பி இருக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, மலேசியா தற்போது லஞ்ச ஊழல், ‘கேபல்’ மற்றும் பதவி பலம் போன்ற தவறான கொள்கைகளை அமல்படுத்தி வரும் நாடாக உருவெடுத்து வருகிறது. ஆகவே மலேசியா மக்கள் போட்டியிடும் திறன் கொண்டு செயல்பட வேண்டும் என்று கூக்குரல் விடும் மத்திய அரசு டெண்டர் மற்றும் குத்தகைகளில் அரசியல்வாதிகள் உதவியின்றி எதுவும் நடக்காது என்ற சூழ்நிலையை உருவாக்கியது ஏன்?

நாம் எந்த ஒரு அரசாங்க அதிகாரிகளை கேட்டாலும் அரசாங்க குத்தகைகள் நிர்வாகத்தில் சம்பந்தப்பட்டவர்களை குறிப்பிட்ட சிலர் லஞ்ச பணம் அல்லது மற்ற பரிசுப் பொருட்களை கொடுப்பது வாடிக்கை என்று கூறுவார்கள். அதேபோல் டெண்டர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தொழில் அதிபர்களை விசாரிக்கும் போது அரசியல்வாதிகள் உதவியின்றி எந்த ஒரு குத்தகையும் கிடைக்காது என்றே கூறினார்கள்

இதேபோல் ‘அலிபாபா’ அமலாக்க முறை, அதாவது உள்நாட்டு குறிப்பாக பூமிபுத்ரா நிறுவனங்களின் வியாபார உரிமங்களை பயன்படுத்தி அந்நியர்கள் வியாபாரம் செய்து வருவது வாடிக்கையாகிவிட்டது. இது மட்டுமில்லாமல் பூமிபுத்ரா அல்லாதவர்கள் பூமிபுத்ரா நிலங்களை வாங்கும் நிலை அதிகரிக்கும் போது மலாய் இனத்திற்கு போராடுவோம் என்று பறைசாற்றும் அம்னோ தேசிய முன்னணி அரசாங்கம் இதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது உண்மை.

மலேசியா போட்டியிடும் திறன் கொண்ட நாடு என்ற தரவரிசையில் மேலும் பின்தங்கிய நிலையிலே இருக்கும். இந்த சூழ்நிலை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் அரசாங்க டெண்டர் மற்றும் வியாபார வாய்ப்புகள் பெற அரசியல் தலையீடுகள் இருப்பதுவே ஆகும். அரசாங்க டெண்டர்களில் நடக்கும் பதவி துஷ்பிரயோகத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கடமையை சரியாக செய்தால் கண்டிப்பாக அமலாக்க பணிகளுக்கு அதிகாரிகள் பற்றாக்குறை ஏற்படும். ஆனால் பிரதமர் துறையின் கீழ் இயங்கும் எஸ்பிஆர்எம் தங்களின் உயர் நிலை முடிவெடுக்கும் அரசியல் தலைவர்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்றால் எப்படி நேர்மையான முறையில் பணியாற்ற முடியும்?

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி, மலேசியாவை தலைசிறந்த போட்டியிடும் திறன் கொண்ட நாடாக மாற்ற உயர்ந்த உற்பத்தி திறன், நியாயமான சம்பள உயர்வு மற்றும் உயர் தர தொழில் நுட்பத்திறன் கொண்டு செயல்படும். வெளியே சிறந்த தரவரிசை என்று கூறிக்கொண்டு அம்னோ தேசிய முன்னணி அரசாங்கம் நிர்வாக கோளாறுகளினால் இறுதியில்   மக்கள் பாதிக்கப்படுவது நம்மால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

 

* டாக்டர் அஸ்மான் இஸ்மாயில் 

கோலா கெடா நாடாளுமன்ற உறுப்பினர்

கெடா மாநில கெஅடிலான் தலைவர்


Pengarang :