RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் மாநிலம் 60,000 பொது மக்களை உபசரிக்க ரிம 2 மில்லியன் செலவிடும்

அம்பாங், ஜூன் 28:

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வு எதிர் வரும் ஜூலை 2-இல் நடைபெற திட்டமிட்டு வரும் வேளையில் 60,000 வருகையாளர்களை எதிர் பார்க்கிறது. மாநில அரசாங்கம் இந்நிகழ்ச்சிக்கு ரிம 2 மில்லியன் செலவிடும் என்று மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். தனது தலைமையிலான சிலாங்கூர் மாநில அரசாங்கம் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பொது மக்களுக்கு பாராட்டு மற்றும் நன்றி செலுத்தும் வகையில் மிகப்பெபெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பபட்டுள்ளது என்று தெரிவித்தார்.

”   ஏற்பாடு செலவுகள் உயர்ந்த நிலையில் குறிப்பாக உணவுகளின் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது என்பதை மாநில நிதி அதிகாரி என்னிடம் கூறினார். 60,000 பொது மக்களை உபசரிக்க ரிம 2 மில்லியன் செலவாகும்,” என்று உறுதிபடுத்தினார்.

Rumah Terbuka Eidulfitri 2017

 

 

 

மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி நேரிடையாக ஏற்பாட்டு பணிகளை பார்வையிட அம்பாங் ஜெயா நகராண்மை கழக திடலில் வந்த போது சிலாங்கூர் இன்றுக்கு மேற்கண்ட தகவல்களை கூறினார். சிலாங்கூர் மாநில மக்கள் ஒருமைப்பாடு மற்றும் சகிப்புத்தன்மை போன்ற அம்சங்கள் கொண்டு மாநில வளர்ச்சிக்கு உதவும் வேளையில் எதிர் காலத்தில் மேலும் மாநிலம் பல வெற்றிகள் பெற வழி வகுக்கும் என்று தெரிவித்தார்.

இதற்கு முன்பு, மாநில நிதி அதிகாரி, டத்தோ நோர்டின் சுலைமான் மந்திரி பெசாருக்கு அளித்த விளக்கத்தில் மாநில அரசாங்கம் இந்நிகழ்ச்சிக்கு ரிம 250,000 ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் மீதி தொகையை சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் துணை நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளும் என்று விவரித்தார்.

#கேஜிஎஸ்


Pengarang :