SUKANKINI

ஹாக்கி அணி சீ விளையாட்டில் தங்கம் வெல்ல இலக்கு

செப்பாங், ஜூன் 29:

அடுத்த ஆண்டு இந்தியாவின்   புபநேஸ்வர் நகரில் நடைபெற உள்ள உலகக் கிண்ண ஹாக்கி போட்டிக்கு தகுதி பெற்ற மலேசிய ஆண்கள் அணி எதிர் வரும் 19-30 ஆகஸ்ட் மாதத்தில் நடக்கும் 29-வது சீ விளையாட்டிலும் மற்றும் 14-22 அக்டோபர் மாதத்தில் டாக்கா, பங்களாதேஷ் ஆசியக் கிண்ணத்திலும் சிறந்த விளையாட்டினை வெளிப்படுத்த தயாராகிவிட்டார்கள்.

லண்டனில் நடைபெற்ற உலகக் கிண்ண அரையிறுதி சுற்றில் நான்காவது இடத்தை பிடித்த ஆண்கள் ஹாக்கி அணியினர் மிகச்சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

”  உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றதினால், ஆசியக் கிண்ணம் வெற்றி முக்கியம் அல்ல. மாறாக நாங்கள் சீ விளையாட்டுப் போட்டியை எதிர் நோக்கி ஏற்பாடுகள் செய்து வருகிறோம். சீ விளையாட்டில் தங்கம் வெல்வது எங்களின் தலையாய கடமை,” என்று ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்தீபன் வான் ஹூசேன் லண்டனில் இருந்து பயணித்து கோலா லம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கிய பின் பெர்னாமாவிடம் கூறினார்.

ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் என்ற முறையில் தனது அணியினரின் விளையாட்டு தரத்தை மேம்படுத்த உலகக் கிண்ண அரையிறுதி சுற்றில் விளையாடிய ஆட்டத்தை மறுபரிசோதனை செய்யப் போவதாக அறிவித்தார்.

அடுத்த ஆண்டு புபநேஸ்வர் நகரில் நடக்கவிருக்கும் உலகக் கிண்ணம் மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் ஏப்ரல் மாதத்தில் நடக்கும் காமன்வெல்த் போட்டி மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் நடக்கும் ஆசியக் கிண்ணம் போன்ற போட்டிகள் அனைத்திலும் சிறந்த விளையாட்டினை வெளிப்படுத்தும் என்று ஸ்தீபன் தெரிவித்தார்.

உலகக் கிண்ண போட்டிக்கு பிறகு ஸ்தீபன் வான் ஹூசேன் ஆசிய நாடுகளில் சிறந்த ஒரு அணியாக மலேசியா உருவாக தொடர்ந்து நல்ல விளையாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று விவரித்தார். ஆசியக் கிண்ணத்தை வெல்லும் அணி நேரிடையாக தோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் 2020 தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்


Pengarang :