NATIONALRENCANA PILIHAN

துணைப் பிரதமர்: 14-வது பொதுத் தேர்தல் செப்டம்பரில் இல்லை

ஷா ஆலம், ஜூலை 17:

நாட்டின் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அமாட் ஜாஹிட் ஹாமிடி எதிர் வரும் செப்டம்பரில் 14வது பொதுத் தேர்தல் நடத்தப்படாது என்று புத்ரா அனைத்துலக வாணிப மையத்தில் நடைபெற்ற அம்னோவின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வில் உரையாற்றிய போது தெரிவித்தார்.

” செப்டம்பர் வெகு அருகாமையில் உள்ளது. பொதுத் தேர்தல் அதைத் தாண்டியே நடக்கும்,” என்று கூறியதாக மலேசியா கினி சேனல் நியூஸ் ஆசியாவை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடங்கியது முதல் 14-வது பொதுத் தேர்தல் நடக்கும் தேதியை கணிக்கும் படலம் ஆரம்பித்தது. பெரும்பாலோர் நோன்பு பெருநாள் பிறகு நடத்தப்படும் என்று தெரிவித்தனர். பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்-க்கு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 2018 வரை தேர்தல் நடத்தும் அதிகாரம் உண்டு. ஆனாலும் அரசியல் ஆய்வாளர்கள் சிலர் 14-வது பொதுத் தேர்தல் செப்டம்பரில் நடக்கும் வாய்ப்பு இருக்காது என்று உறுதியாக கூறுகின்றனர். ஏனெனில் 29-வது சீ விளையாட்டு போட்டிகள் கோலாலம்பூரில் அதே மாதத்தில் நடக்க இருப்பதால் தேர்தல் நடக்கும் சாத்தியம் இல்லை என்று உத்தரவாதம் அளித்துள்ளனர்.

#கேஜிஎஸ்


Pengarang :