SUKANKINI

சரவாக்கை வீழ்த்தி பிகேஎன்எஸ் எப்ஃசி மூன்று புள்ளிகளை பெற்றது

கூச்சிங், ஜூலை 22:

பிகேஎன்எஸ் எஃப்சி சூப்பர் லீக் ஆட்டத்தில் சரவாக்கை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மூன்று புள்ளிகளை பெற்றது. கூச்சிங், பெட்ரா ஜெயா, நெகிரி அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிகேஎன்எஸ் அணியின் வெற்றி கோலை மாற்று ஆட்டக்காரர் முகமட் நிஸாம் அபு பாக்கார் 68-வது நிமிடத்தில் அடித்தார்.

பிகேஎன்எஸ் அணியினர் சிறந்த முறையில் ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டனர். ஆனாலும் சரவாக் அவ்வப்பொழுது திடீர் தாக்குதல் நடத்தினாலும் முன்னணி ஆட்டக்காரர்களின் மோசமான ஆட்டத்தினால் மீண்டு வர முடியாமல் போனது. இந்த வெற்றியின் மூலம் பிகேஎன்எஸ் அணியின் மூன்று புள்ளிகளை பெற்று தற்போது 18 மொத்த புள்ளிகள் பெற்றுள்ளது. சரவாக் தொடர்ந்து 14 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் உள்ளது.

 

=EZY=


Pengarang :