ANTARABANGSARENCANA PILIHAN

ரொஹின்யா நெருக்கடியை தீர்க்க, எர்டோகன் உலகத் தலைவர்களை தொடர்பு கொண்டார்

உலகம், செப்டம்பர் 3:

துருக்கி அதிபர் ரிகேப் தாயீப் எர்டோகன் தொடர்ந்து உலகத்தின் முன்னணி தலைவர்களை தொடர்பு கொண்டு மனிதாபிமான அடிப்படையில் ரொஹின்யா இஸ்லாமியர்களின் நெருக்கடியை தீர்க்க அனைத்துலக ரீதியில் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றார்.

துருக்கி நாட்டின் செய்தி நிறுவனமான அனாடொலு ஏஜென்சி தனது செய்தியில் ஹாஜி பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கஸாக்தான், செனகல் மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளுக்கு எர்டோகன் மேற்கண்டவாறு அனுப்பியதாக கூறியது.

Erdogan Turki 1

 

 

 

 

கடந்த வாரம், எர்டோகன் மியான்மர் ரொஹின்யா இஸ்லாமியர்கள் நெருக்கடி தொடர்பில் தொலைபேசியில் பாகிஸ்தான், ஈரான், மௌரிதானியா, காட்டார், சவுதி அரேபியா, குவைத், அஸர்பைஜான் மற்றும் வங்காளதேசம் போன்ற நாடுகளின் தலைவர்களிடம் இதே போன்று பேசினார்.

இதனிடையே அனைத்துலக செய்தி நிறுவனங்கள் 2,600-க்கும் மேற்பட்ட வீடுகளை வடமேற்கு மியான்மர், ராக்கின் மாநிலத்தில் எரித்ததாக செய்தி வெளியிட்டுள்ளது. இதுவே ரொஹின்யா இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதல் எனவும் வர்ணிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் ஆணையம் (யுஎன்எச்சிஆர்) ஏறக்குறைய 58,600 ரொஹின்யா இஸ்லாமியர்கள் ராக்கின் மாநிலத்தை விட்டு வெளியேறி வங்காள தேசத்தில் அடைக்கலம் தேடி வருகின்றனர்.

#கேஜிஎஸ்

Rohingya

 

Rohingya

 


Pengarang :