SELANGOR

சிலாங்கூர் பாக்காத்தான் தலைமைத்துவம் அமைக்கப் பட்டது

ஷா ஆலம், செப்டம்பர் 8:

சிலாங்கூர் மாநில பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் தலைமைத்துவ குழுவை மாநில தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி அறிவித்தார். கூட்டணியின் உறுப்புக் கட்சிகளான கெஅடிலான் நான்கு உறுப்பினர்களையும், ஜசெக மற்றும் அமானா கட்சிகள் தலா மூன்று உறுப்பினர்களையும் மற்றும் பெர்சத்து இரண்டு உறுப்பினர்களையும் கொண்டு இயங்கும் என்று கூறினார்.

WhatsApp Image 2017-09-08 at 1.07.01 PM

 

 

 

 

 

 

மாநிலத்தின் துணைத் தலைவர்களாக ஜசெகவின் தோனி புவா, அமானாவை சேர்ந்த இஸாம் ஹாஷிம், பெர்சத்துவின் டத்தோ அப்துல் ரஷீத் அஸாரி மற்றும் கெஅடிலான் கட்சியை சேர்ந்த சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா ராசயா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

மேலும் கெஅடிலான் கட்சியின் அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூரைடா கமாரூடின் மாநில செயலாளராகவும் ஸ்ரீ அண்டாலாஸ் சட்ட மன்ற உறுப்பினரும் மற்றும் கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தேர்தல் குழு தலைவராக நியமனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சிலாங்கூர் சட்ட மன்ற சபாநாயகர் ஹான்னா இயோ பொருளாளராகவும் மற்றும் பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந் சிங் சட்ட நடவடிக்கை குழு தலைவராக நியமனம் செய்துள்ளது.

அமானா கட்சியை சேர்ந்த கமாரூல் ஹிஷாம் துணை செயலாளராகவும், ஷாரி சுங்கிப் தேர்தல் அறிக்கை நடவடிக்கை குழு தலைவராகவும் பெர்சத்து கட்சியை சேர்ந்த டாக்டர் சுக்கிமான் ஷார்மானி தகவல் பிரிவு தலைவராகவும் அஸ்மின் அலி பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் சிலாங்கூர் மாநில முதல் கூட்டத்திற்கு பிறகு அறிவித்தார்.

#கேஜிஎஸ்


Pengarang :