Uncategorized @ta

ரிம 2.6 பில்லியன் சிலாங்கூரில் பொது மக்களுக்காக பயன்படுத்தப் படுகிறது, ஒருவருக்காக அல்ல !!!

கோலா சிலாங்கூர், அக்டோபர் 22:

கடந்த ஜூலை 31, 2017 வரை மாநில அரசாங்கம் சிலாங்கூர் மக்களுக்கு ரிம 2.6 பில்லியனை செலவிட்டுள்ளது. 43 பரிவுமிக்க மக்கள் நலத்திட்டங்களை (ஐபிஆர்) செயல்படுத்தியன் வழி சிலாங்கூர் மாநில மக்கள் பயன் அடைந்தனர் என்று சிலாங்கூர் மாநில இஸ்லாமிய விவகாரங்கள், மலாய் பாரம்பரியம், புறநகர் மற்றும் கிராமப்புற மேம்பாடு ஆகிய நிரந்தர குழுவின் ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ டாக்டர் அமாட் யூனூஸ் ஹைரி கூறினார். ரிம 2.6 பில்லியனை ஒருவரே எடுத்துக் கொண்டது சிலாங்கூரில் நடக்க வாய்ப்பில்லை.

”  ரிம 2.6 பில்லியன் சிலாங்கூர் மக்களுக்கு செலவிட்டுள்ளதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. ஆனாலும் சிலாங்கூர் பொது மக்கள் பலர் ஐபிஆர் திட்டங்களை பற்றி இன்னும் தெரியாமல் உள்ளனர். திருமணம் ஆகும் இளையோர் ஊக்குவிப்பு தொகை பற்றி தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்,” என்று கூறினார்.

 

 

 

 

டத்தோ யூனூஸ் மேற்கண்டவாறு கோலா சிலாங்கூர் மாவட்ட கிராம பெருவிழா மற்றும் சிறந்த கிராம பரிசளிப்பு விழா 2017 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு, கம்போங் புக்கிட் கூச்சிங்கில் செய்தியாளர்களிடம் பேசினார்.

#கெஜிஎஸ்


Pengarang :