NATIONALRENCANA PILIHAN

தேசிய முன்னணியின் ஆட்சிக்கு முடிவு

ஷா ஆலாம் – நாட்டின் 14வது பொது தேர்தலோடு தேசிய முன்னணியின் ஆட்சி ஒரு முடிவுக்கு வந்து விடும் என முன்னால் பிரதமர் துன் மகாதீர் கூறியதாக சர்வதேச செய்திகள் ஏஜென்சியான “புளூம்பேர்ஜ்” கூறியது.

மக்களின் நம்பிக்கையும் பெரும் ஆதரவும் அதேவேளையில் அவர்களின் செண்டிமென் உணர்வும் எங்களுக்கு சாதகமாய் இருப்பதால் தேசிய முன்னணியின் ஆட்சி முடிவுக்கு வருவது காலத்தின் கட்டாயம் எனவும் பெர்சத்து கட்சியின் தலைவருமான அவர் நேர்காணலில் குறிப்பிட்டார்.\

அடுத்தாண்டு மே மாதம் வரையில் கால அவகாசம் இருந்தாலும் நடப்பியல் சூழலில் இவ்வாண்டில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 14வது பொது தேர்தலுக்கு வாய்ப்பு ஏற்படலாம் என கூறிய துன் மகாதீர் தேசிய முன்னணி மீது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ப்தி நிலவினாலும் இவ்வாண்டு நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு சாத்தியம் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

இன்றைய சூழலில் யாரை கேட்டாலும் தேசிய முன்னணி அரசாங்கம் குறித்தும் அதன் தலைமைத்துவம் குறித்தும் நல்ல கருத்துக்களையும் வரவேற்கும் வகையிலான கருத்துக்களை கூறுவதில்லை என கூறிய அவர் குறிப்பாக நாட்டின் பிரதமர் நஜிப் குறித்து நல்ல எண்ணங்கள் மக்கள் மத்தியில் இல்லை என்றும் கூறினார்.

இதற்கிடையில்,ஹராப்பான் கூட்டணியில் பாஸ் கட்சியை இணைப்பதில் இன்னமும் நம்பிக்கையான செயல்பாடுகள் இல்லாதது தேசிய முன்னணிக்கு ஒரு பலமாக இருக்கலாம் என கருத்துரைத்த அவர் எங்களின் கூட்டணிக்கு அப்பால் தேர்தலை எதிர்க்கொள்பவர்கள் நஜிப்பையும் தேசிய முன்னணியையும் ஆதரிப்பதற்கு ஈடானது என்றும் குறிப்பிட்டார்.

எதிர்கட்சி கூட்டணியின் வாக்குகளை குறைப்பதால் மட்டுமே அஃது தேசிய முன்னணியின் வெற்றிக்கு வழிகோலும் என கூறிய துன் மகாதீர் இன்றைய  சூழலில் தேசிய முன்னணியை காட்டிலும் ஹராப்பான் கூட்டணி மக்களின் பெரும் நம்பிக்கையை பெற்றிருப்பதால் நாட்டின் 14வது பொது தேர்தல் தேசிய முன்னணி ஆட்சிக்கு முடிவுக்கட்டும் என்றார்.

 

 


Pengarang :