ECONOMY

இரப்பர் விலை அடுத்த வாரம் இறக்கம்

கோலாலம்பூர், மே 6:

மலேசியாவின் இரப்பர் சந்தை அடுத்த வாரம் மிக மந்தமான சூழ்நிலையில் இருக்கும் என்றும் ஏனெனில் ஊக்குவிக்கும் விதமாக எந்த சக்தியும் இல்லை என்று வியாபாரி ஒருவர் விவரித்தார். மேலும் கூறுகையில் உள்நாட்டு சந்தை நிலைமை தோக்யோ பொருள் பரிமாற்ற சந்தை மற்றும் ஷங்காய் எதிர்கால பரிமாற்ற சந்தை, அதோடு ரிங்கிட்டின் விலை மற்றும் எண்ணெய் விலை ஆகியவற்றை சார்ந்து இருக்கும் என்றார்.

”   முடிந்த வாரத்தில் சந்தை நிலைமை ஏற்றம்  இறக்கமாக இருந்ததாகவும், தோக்யோ பொருள் பரிமாற்ற சந்தை மற்றும் ஷங்காய் எதிர்கால பரிமாற்ற சந்தை, அதோடு ரிங்கிட்டின் விலை மற்றும் எண்ணெய் விலை போன்ற காரணிகளால் மிகவும் பாதிக்கப்பட்டது,” என்று பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், தெற்கு தாய்லாந்து மற்றும் மலேசியா இரப்பர் நடும் பகுதியில் மழை காரணமாக உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது என்றும், இதனால்  இதன் சந்தைக்கு ஆதரவு கிடைக்கும் என்று தெரிவித்தார். மலேசியா இரப்பர் வாரியத்தின் ஸ்எம்ஆர் 20 விலை 46 சென் சரிவு கண்டு 634.50 ஒரு கிலோ கிராம் மற்றும் இரப்பர் கட்டி விலை 18 சென் குறைந்து 616 சென் ஆக குறைந்தது.

மாலை 5 மணிக்கு, இரப்பரின் ஸ்எம்ஆர் 20 விலை 70 சென் குறைந்து 625 சென் ஆக குறைந்தது, இரப்பர் கட்டி பால் விலை 13 சென் குறைந்து 613 சென் ஆக பரிவர்த்தணை செய்யப்பட்டுள்ளது.


Pengarang :