TOURISM

ஆசியானின் 50-வது ஆண்டை கொண்டாடும் வகையில், ஏர்ஆசியாவின் கட்டணக் கழிவுகள்

ஷா ஆலம், ஆகஸ்ட் 6:

ஆசியான் அமைப்பின் 50-வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏர்ஆசியா வட்டார நாடுகளுக்கான பயணங்களின் கட்டணங்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் என்று ஏர்ஆசியா குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி டான்ஸ்ரீ தோனி பெர்ணான்டஸ் தெரிவித்தார். ஆசியான் கடந்த 50 ஆண்டுகளில், இந்த வட்டாரத்தில் வசிக்கும் மக்களுக்கு ஒற்றுமையை உணர்த்துகிறது என்றார்.

”  ஆசியான் குடிமக்களாகிய நாங்கள், அமைப்பின் அர்ப்பணிப்பை மதிப்பளிக்கும் வகையில், மிகக் குறைந்த கட்டணத்தில் டிக்கெட் விலையை நிர்ணயம் செய்துள்ளோம். இது மூலம் ஆசியான் மக்கள் இந்த வட்டாரத்தில் பயணம் செய்ய வழி வகுக்கும்,” என்று தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆசியான் நாடுகளில் பயணம் மேற்கொள்ள கோலா லம்பூரில் இருந்து லங்காவி, ஜோகூர் பாரு, பினாங்கு, மேடான், கலீபோ, சிஹானூக்விலே, புனம் பேன் மற்றும் பல நகரங்களுக்கு ரிம 50 கட்டணத்தில் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டிக்கெட்களை பதிவு செய்ய ஏர்ஆசியாவின் இணையதளமான airasia.com மூலமாக ஆகஸ்ட் 7 முதல் 13 வரை செய்து கொள்ளலாம். பயண காலங்கள் ஆகஸ்ட் 7-இல் இருந்து அடுத்து ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ஆகும் என்றார். மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், புரூணை, கம்போடியா, மியான்மர், லாவோஸ் மற்றும் வியட்நாம் போன்ற அனைத்து ஆசியான் நாடுகளுக்கும் இது பொருந்தும் என்று பெர்ணான்டஸ் தெரிவித்தார்.

#கேஜிஎஸ்


Pengarang :