NATIONAL

குண்டர் கலாச்சாரத்தைப் பின்பற்றும் ம.இ.காவை மக்கள் புறக்கணிப்பர்

கோலா லம்பூர், செப்டம்பர் 6:
எதிர்வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் இந்தியர்களின் ஆதரவைப் பெற்று அமோகமாக வெற்றி பெறுவோம் என்று தம்பட்டம் அடிக்கும் ம.இ.காவின் தோற்றம் டத்தோ சரவணன் அண்ட் கோ நடவடிக்கையால் நம்பிக்கை இழந்து நிற்கிறது.

தமிழ் மலர் அலுவலகத்தைத் தாக்கி அங்குள்ளவர்களுக்குக் காயம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் டத்தோ சரவணனின் கைக்கூலிகள் என்று புலனங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகிறது. மேலும் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
போலீசில் கொடுக்கப்பட்ட புகாரை புதிய போலீஸ் தலைவர் யாருக்கும் முகம் கொடுக்காமல் விசாரிக்கவேண்டும். முன்னாள் போலீஸ் தலைவரைபோல் எதையும் கம்பளத்திற்கு அடியில் மறைக்காமல் இருக்க வேண்டும் என்று பினாங்கு இரண்டாவது நிலை துணை முதலமைச்சர் பி.ராமசாமி கூறியுள்ளார் என்று பெரிதா டெய்லி இணையத்தளப் பத்திரிக்கை பதிவு செய்துள்ளது.
சரவணனைத் தொடர்ந்து துணையமைச்சராகப் பதவியில் வைத்துக் கொண்டால் அது நாளடைவில் மக்கள் மத்தியில் பிரதமரின் ஆட்சி நிர்வாகத்தின் மேல் நம்பிக்கை இழக்கச் செய்துவிடும் என்று ராமசாமி கருத்துத் தெரிவித்துள்ளார்.
குண்டர் குண்டர் கலாச்சாரத்தை ஆதரிக்கும் தலைவர்களை அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ டாகடர் சுப்பிரமணியம்
களை எடுப்பாரா? அல்லது அவரும் குண்டர் கும்பல் தலைவர்களின் மிரட்டலுக்கு அடிபணிவாரா? என்று பொறுத்திருந்து பார்க்கிறேன் என்கிறார்கள் மக்கள்.

#சரவணன்


Pengarang :